கல்விபோட்டித்தேர்வுகள்வேலைவாய்ப்புகள்

தமிழக மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு!

தமிழக மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடனளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உடையோர் விண்ணப்பிக்கலாம். தமிழக மின்வாரியத்தில் உதவி கணக்கு அலுவலர் மற்றும் கள உதவியாளர் பழங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வி

மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு பெற சி ஏ மற்றும் ஐடிஐ படிப்பினை படித்திருக்க வேண்டும்

தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கையில் வெளியிட்டுள்ள தகவலின்படி சுமார் 2918 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என அதிகாரப்பூர்வ தளத்தின் தகவல் வெளியிட்டு இருக்கின்றது. மேலும் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இரு தேதி மார்ச் 16, 2021 ஆகும்.

சம்பளம்

தமிழ்நாடு மின்வாரியத்தில் கள உதவியாளர் பணிக்கு சம்பளமாக மாதம் ரூபாய் 18,800 முதல் 59,900 வரை அறிவிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் உதவி கணக்கு அலுவலர் பணிக்கு மாதம் ரூபாய் 56,300 முதல் 1,78,000 வரை சம்பளம் கொடுக்கப்படுகின்றது.

வயது வரம்பு

மின் வாரியத்தில் பணி வாய்ப்பு தர அறிவிக்கப்பட்டுள்ள வயது வரம்பு ஆனது 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்கவேண்டும். மேலும் அந்தந்த பிரிவினருக்கு ஏற்ப வயது வரம்பு சலுகை அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

தேர்வு

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உடல் தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.

விண்ணப்பக் கட்டணம்

தமிழ்நாடு மின்வாரியத்தில் பணி வாய்ப்புகள் விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 1000 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்சிஏ, எஸ் டி பிரிவினர் ரூபாய் 500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

மின்வாரியத்தில் உதவி அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க ரூபாய் இரண்டாயிரம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ் சி, எஸ்டி, எஸ்சிஏ போன்றோர் ரூபாய் 1000 விண்ணப்பக் கட்டணம் செலுத்தினால் போதுமானது ஆகும். விண்ணப்பங்களை ஆன்லைனில் செலுத்த வேண்டும். அதிகாரப்பூர்வ கள உதவியாளர் பணிக்கான விண்ணப்ப லிங்கினை இங்கு https://www.tangedco.gov.in/linkpdf/Notification-AAO-2021.pdf கொடுத்துள்ளோம் அதனை கிளிக் செய்து படித்து பார்த்து விண்ணப்பிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *