கல்விதேர்வுகள்வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத் துறையில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 764 பேர்கள் ஆகும்.

தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத் துறையில் காலியாக இருக்கும். மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் போன்ற பணிகளுக்கு நிரப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டிருக்கிறது.

பணியிடங்கள்

பொது சுகாதாரத்துறை பணியில் வேலைவாய்ப்பு பெறுவோர் ஈரோடு, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் போன்ற இடங்களில் பணி வாய்ப்பு பெறுவார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் 156 பணியிடங்கள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 53 பணியிடங்கள் சேலம் மாவட்டத்தில் 321 பணியிடங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் 146 பணியிடங்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் 88 பணியிடங்கள் என மொத்தம் 764 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

சம்பளம்

மருத்துவ அலுவலர் பணிக்கு மாத சம்பளமாக ரூபாய் 60,000 வழங்கப்படுகின்றது. செவிலியர் பணிக்கு மாத சம்பளமாக ரூபாய் 14,000 வழங்கப்படுகின்றது. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணிக்கு ரூபாய் 6000 சம்பளமாக வழங்கப் படுகின்றது.

கல்வித்தகுதி

மருத்துவ அலுவலர் பணிக்கு கல்வித் தகுதியாக எம்பிபிஎஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும். செவிலியர் பணிக்கு என்ஜிஎம் எண்ணம் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது

செவிலியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் வயதுவரம்பு 35க்குள் இருக்க வேண்டும் மேலும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணிக்கு நினைப்பவர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

அஞ்சல் மூலமாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விண்ணப்பத்துடன் பணியில் சேர்வதற்கான சுய விருப்ப கடிதம் மற்றும் தேவைப்படும் சான்றிதழ்கள் அனைத்தையும் முறையாக இணைத்து அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி பிப்ரவரி 11-ஆம் தேதி 2021 ஆகும் மாவட்ட வாரியாக அறிவிப்பு இணைப்பினைப் பெற

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *