கல்விபோட்டித்தேர்வுகள்வேலைவாய்ப்புகள்

தமிழ் நாடு அரசுக் குழந்தைகள் நலச் சங்கத்தில் வேலைவாய்ப்பு!

அரசு வேலை என்பது பலருக்கு கனவாக இருக்கின்றது அது போல் அரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்வீர்களா நீங்கள், உங்களுக்கான வாய்ப்பு இது பயன்படுத்திக் கொள்ளவும். தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலைவாய்ப்பு குறித்து அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்கத் தகவல்களைக் கீழே கொடுத்துள்ளோம்.

தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ள மொத்த பணியிடங்கள் எண்ணிக்கை 16 ஆகும்.
தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்புச் சங்கம் அறிவித்துள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கல்வித்தகுதியாகப் ஏதேனும் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்புச் சங்கத்தில் வேலைவாய்ப்பு பெற கல்வித் தகுதியாகப் பட்டப்படிப்பு முடித்து இருப்பதுடன் 26 வயது முதல் 40 வயது உடையோர் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தாரர்கள் தமிழ்நாட்டில் எங்கு வேணாலும் பணியில் அமர்த்தப் படலாம். நேர்முகத் தேர்வு மூலமாகத் தகுதியுடையோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலைவாய்ப்பு பெற பெறுவோர்கள் மாத சம்பளமாக ரூபாய் 33, 250 ரூபாய் பெறலாம்.

தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதித் தேதி அக்டோபர் 9, 2020 ஆகும்.

வேலைவாய்ப்பு நிறுவனம் அரசு வேலை குழந்தைகள் பாதுகாப்புச் சங்கம்
பணியிடங்கள் எண்ணிக்கை 16
வயது வரம்பு 26-40
பணியிடம்தமிழ்நாடு

மேலும் முழுமையான தகவல்களைப் பெற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பை https://www.tn.gov.in/announcements இங்குக் கொடுத்துள்ளோம். அதனைக் கிளிக் செய்து படிக்கவும் அத்துடன் அதிகாரப்பூர்வ நோட்டிபிகேஷன் கொடுக்கப்பட்டுள்ள https://cms.tn.gov.in/sites/default/files/job/SCPS_DCPO_190920.PDF லிங்கை கிளிக் செய்து முழுமையாக விண்ணப்பத்தைப் படித்துப் பார்த்து விண்ணப்பிக்கவும்.

தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ள இந்த வேலைவாய்ப்பின் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள், உரிய சான்றிதழ் நகல்கள், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவை இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

ஆணையர் செயலாளர்,

மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம்,

சமூக பாதுகாப்பு துறை.

எண் 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை,

கெல்லீஸ்,

சென்னை 6 00010

தொலைபேசி எண்கள்: 044-2642 1358

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *