கல்விவேலைவாய்ப்புகள்

5 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு

மதுரை மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. மதுரை மாவட்டத்தில் சத்துணவு துறையில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் சுமார் 988 பேர் காலிப்பணியிடங்கள் இருக்கின்றன.

பணியிடங்கள் எண்ணிக்கை

காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் விருப்பமுடையோர் அனுப்பலாம். மதுரை மாவட்டம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெற மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 988 ஆகும்.

கல்வித்தகுதி:

மதுரை மாவட்டத்தில் சத்துணவு துறையில் பணி வாய்ப்பு பெற கல்வித் தகுதியாக பள்ளீப் படிப்பாக ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்

மதுரை சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு பெறுவோர் ரூபாய் 3000 முதல் 24 ஆயிரத்து 200 ரூபாய் வரை மாத சம்பளம் பெறலாம்.

வேலைவாய்ப்பு நிறுவனம் மதுரை மாவட்ட நிர்வாகம்
பணியிடங்கள் எண்ணிக்கை 988
வயது வரம்பு18 முதல் 40
பணியிடம்மதுரை தமிழ்நாடு,

வயது

மதுரை மாவட்டத்தில் சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு பெற 18 வயது முதல் 40 வயது வரை உள்ளூர் விண்ணப்பிக்கலாம் நேர்காணல்மூலம் தகுதியுடையோர் தேர்வு செய்யப்படுகின்றனர்.

சத்துணவு துறை பணிக்கு தேர்வுச் செய்யப்பட்டவர்கள் மதுரையிலேயே பணியில் அமர்த்தப்படுவார்கள் இப்பணிக்கு விண்ணப்பக் கட்டணங்கள் எதுவும் அரசு அறிவிக்கவில்லை

விண்ணப்பங்கள்

இப்பணிக்கு செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கத் தொடங்கலாம். மதுரை சத்துணவு திட்டத்தில் பணி வாய்ப்பு பெற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி அக்டோபர் 1, 2020 ஆகும்.

அதிகாரப்பூர்வ இணைப்பு

மதுரை சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு குறித்து முழு தகவலையும் பெற அதிகாரப்பூர்வ தளத்தில் தெரிந்து கொள்ளலாம். அதிகாரபூர்வ இணைப்பினை இங்குக் கொடுத்துள்ளோம். https://madurai.nic.in/ அதனை கிளிக் செய்து படிக்கவும்.

மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைப்பையும் https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2020/09/2020092681.pdf இங்குக் கொடுத்துள்ளோம். அதனைக் கிளிக் செய்து, முழுமையாகப் படித்துப் பார்த்து விண்ணப்பத்தினை முறையாகப் பூர்த்தி செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *