மத்திய அரசின் தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
மத்திய அரசின் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற ஆராய்ச்சியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் 1970 ஆம் ஆண்டு முதல்கட்டமாகவும் இரண்டாம் கட்டமாக 1990 ஆம் ஆண்டு இரண்டாம் கட்டமும் இயங்குகின்றது.
இதன் முக்கிய ஆராய்ச்சி நிலையம் பெங்களூரில் இருக்கின்ற ஹெசர்கட்டாவாகும். இங்குச் சுமார் 263 ஹெக்டார் நிலம் பயன்படுத்தப்படுகின்றது. மத்திய அரசின் வேளாண்மை துறையில் பணி வாய்ப்பு பெற பிஎச்டி படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவார்.
சம்பளம்:
தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தில் இணை ஆராய்ச்சியாளர் பணியிடத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள சம்பளம் ரூபாய் 54 ஆயிரம் ஆகும்.
வயது:
இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தில் இணை ஆராய்ச்சியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 40 முதல் 45 வயது அடையும் விண்ணப்பிக்கலாம். மேலும் வயதுவரம்பு அரசு விதிமுறைகளின்படி விதிவிலக்கு இருக்கின்றது. விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்குக் கொடுத்துள்ளோம். விண்ணப்பித்தவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வுத் தேதி செப்டம்பர் 30 ஆகும். செப்டம்பர் 30 அன்று காலை 10 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வுத் தகுதி கலந்து கொள்ள வேண்டும்.
மத்திய அரசின் தோட்டக்கலை இணை ஆராய்ச்சியாளர் பணிக்கு நேர்முகத் தேர்வு பெங்களூரில் நடைபெறும் பெங்களூரில் நேர்முகத்தேர்வு நடைபெறும் முகவரியினை கீழே கொடுத்துள்ளோம்.
ஐஐஹெச்ஆர்,
ஹெசர்கட்டா லேக் போஸ்ட்
பெங்களூர் 560089
நேரடி தேர்வுமூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் மேலும் விவரங்களைப் பெற அதிகாரப்பூர்வ இணைப்பினை இங்கே https://www.iihr.res.in/ கொடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கிளிக் செய்யவும்.