ஊராட்சி வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு ஊராட்சி வளர்ச்சித் துறையில் பணிவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிநாட்டில் திண்டுக்கல் மாவட்டப் பகுதியில் ஊராட்சி பணியிட வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் பகுதியில் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பளிக்கலாம்.
- கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
- திண்டுக்கல் மாவட்டத்தில் பணியிடம் அமைக்கப்பட்டுள்ளது.
வில்லேஜ் அஸிஸ்டெண்ட் பணியிடங்களுக்குத் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.
பணியிட எண்ணிக்கை
திண்டுக்கல் மாவட்டத்தில் வில்லேஜ் அஸிஸ்டெண்ட் பணியிடங்களுக்கு மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 17 ஆகும்.
வயது
திண்டுக்கல்லில ஊராட்சிப் பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 21 வயது முதல் 35 வயது வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி
திண்டுக்கல்லில் குஜிலியம்பாறை/நிலக்கோட்டை பகுதியில் பணிவாய்ப்பு பெற அந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். 5 ஆம் வகுப்புப் பள்ளி படிப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இரு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும்.
விண்ணப்பம்
கல்வி மற்றும் மற்ற சான்றிதழ்கள் அனைத்தையும் முறையாக இணைத்து விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
அக்டோபர் 22, 2020 ஆம் தேதி விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஆகும்.
அதிகாரப்பூர்வ இணைய இணைப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் குஜிலியம்பாளையத்தில் அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பை இங்குகொடுத்துள்ளோம் கிளிக் செய்து விண்ணப்பிக்கத் தொடங்கவும்.
https://dindigul.nic.in/kujiliamparai-village-assistant-job/