இந்திய இதயங்களின் சகாப்தம் ஏபிஜே அப்துல் கலாம்…
சாதாரண குடிமகனாக பிறந்து நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தவர்
தன்னிகரற்ற மனிதர் !மாணவர்களின் மனசாட்சி! இந்திய இதயங்களில் இவர் ஒரு சகாப்தம். இந்தியாவின் கடைக்கோடி பகுதியில் 1931ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி பிறந்தவர் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் திரு டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம். இந்திய தேசத்தில் சாதாரண குடிமகனாக பிறந்து நாட்டின் முதல் குடிமகனாக விளங்கும் பெருமைமிகு பதவியைப் பெற்றவர் திரு டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் என்பது இந்திய தேசத்தின் பெருமைமிகு நிகழ்வுகளில் ஒன்றாகும்.
எளிமையின் மறு உருவத்தின் தொடக்க வாழ்க்கையும் கல்வியும்
ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் எளிமையின் மறு உருவமாக இருந்தார். சிறுவயது முதலே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை மிகுந்த கவனமுடன் தனது சொந்த உழைப்பில் படித்து முடித்தார். டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் மெட்ராஸ் யுனிவர்சிட்டி எம்ஐடி பட்டம் பெற்றவர், இந்தியாவின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் ஆவார். இந்தியாவில் பொக்ரான் அணுகுண்டு வெடிப்பு சோதனை உலக அறியாமல் செய்து முடித்து உலகையே வியக்க செய்தவர் நமது கலாம் ஆவார்.
இந்தியா வல்லரசாக கனவு கண்டவர்
இந்தியா வல்லரசாக வேண்டும் என்று தொலைநோக்குப் பார்வையை இந்திய இதயங்களில் விதைத்ததில் கலாம் அவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்தபோது நாட்டிலுள்ள பெரும்பாலான மாணவர்களை சந்தித்து கனவு காணும் முறையை கற்றுக் கொடுத்தவர். உயர்ந்த எண்ணங்களை குறிக்கோளாக கொண்டு அதற்காக அயராது பாடுபட வேண்டும் என்று இந்திய மாணவர்களை ஊக்குவித்தவர். இந்திய மாணவர்களுக்கு இவர் நெருங்கிய ஒரு மனிதராக இருந்தார். இவரைப் போன்று ஒரு மனிதர் இந்த உலகில் மீண்டும் கிடைப்பாரா என்றால் சற்று கடினம்தான் ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவராக இருந்த போதும் எளிய உணவினை தனதாக கொண்டிருந்தவர். எல்லோரிடமும் எளிதாக பழகுவர். சாதி ,மதம் ,இனம் ,மொழி கடந்து ஒரு நாடே ஒன்று சேர்ந்து தத்தளித்து தவித்தது என்றால் அது திரு கலாம் அவர்களின் மறைந்த தினம் ஆகத்தான் இருக்க முடியும். தனது வாழ்நாள் முழுவதும் தேசத்திற்கு என்றே அர்ப்பணித்து வாழ்ந்தவர் நமது கலாம் ஆவார். ஜூலை 27 ஆம் தேதி 2015 ஆம் ஆண்டு சில்லாங் பகுதியில் மாணவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது கலாம் அவர்கள் தனது இறுதி மூச்சை மாணவர்களுடன் செலவழித்தார். கலாம் அவர்கள் இந்திய இளைஞர்கள் இதயத்தில் இன்னும் இருந்துகொண்டேதான் இருக்கின்றார்
இந்த நன்னாளில் இவரை சிலேட்டு குச்சி நினைவுகூர்ந்து பெருமிதம் கொள்கின்றது. இவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்! தொலைநோக்கு பார்வையில் தொலைதூரம் பயணித்து நம்மையும் நமது தேசத்தையும் உயர் பாதைக்குக் கொண்டு செல்வோம் ! வந்தே மாதரம்! வாழ்க பாரதம்!!!!