அட்டகாசமான அனுஹாசன் முயற்சி லாக்டவுனில் பயிற்சி செய்யுங்கள்
தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற அடையாளமாக இருப்பவர் கமலஹாசன், அவருடைய அண்ணன் மகள் அனுஹாசனும் இவர் ஒரு சில படங்களே நடித்திருப்பார் இந்திரா படத்தில் இவர்தான் ஹிரோயினி ஆனால் அதுதான் ஹிரோயினியாக நடித்த முதல் படம் மற்றும் கடைசிபடம். என்னதான் இவங்க ஒரு படம் நடித்திருந்தாலும் சிறப்பான நடிப்பு வெளிப்படுத்தியிருப்பார். அறிவுப்பூர்வமான நடிக்கை ஆத்மாத்மான ஒரு இணக்கம் கொண்ட நடிகை ஆவார்.
அனுஹாசன் குட்டைப் பாவாடை அணிந்து நடிக்க விருப்பமில்லை என்று கூறியிருந்தாலும், காலப் போக்கில் அவர் நடித்த படங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு சில சீன்களே நடித்திருந்தாலும் சிறப்பாக நடித்திருப்பார். இவரின் பண்முகத்தன்மை அதில் வெளிப்பட்டிருக்கும்.
படிப்பாளி அனு:
அனுஹாசன் படிப்பில் அதிகம் ஆர்வம் கொண்டவர் இந்தியாவின் சிறந்த படிப்பகமான பிட்ஸ் பிலானியில் படித்தவர் மற்றும் ஐஐடி மாணவர்களுக்கு சிறப்பு அழைப்பாளாரக சென்று தம் அறிவு பகிர்தலை அழகாக வெளிப்படித்தியிருப்பார்.
ஜாலி டைப் :
காமிக்கான ஜாலி டைப் அனுஹாசன் தற்பொழுதைய லாக்டவுன் காலத்தில் சமூக வலைதளத்தில் எளிமையாக மக்களோடு மக்களாக பல நல்ல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு லாக்டவுன் நேரத்தில் மனத்திடம் , ஆரோக்கியம் உடற்பயிற்சி போன்றவற்றை எல்லாம் அந்தந்த வல்லுநர்கல் வைத்து அனைவருக்கும் புரியும்படியான எளிமையான செசன்கள் எல்லாம் நடத்தியிருந்தார். மிகுந்த இணக்கமானவராக இருந்தார்.
அனுஹாசன் ஒரு படமே ஹீரோயினாக நடித்திருந்தாலும் நச்சென்று நல்ல கதையம்சத்துடன் கூடிய யாராலும் மறக்க முடியாத, இந்தியாவின் பெரிய சமூக கருத்தினை முன்வைத்து நடித்திருந்தார். அவர் ஒரு படத்தில் மட்டுமே ஹீரோயினியாக நடித்திருந்தாலும் பல நல்ல வாய்ப்புக்களை முறையாக பயன்படுத்தி இன்றைய டிஜிட்டல் மீடியா மேலும் தனக்கென ஒரு தனித்தன்மையை வைத்துள்ளார்.
அவர் இந்த காலத்தில் மனதை ரிலாக்ஸ் செய்வது தேவையற்ற சிக்கல்கள் மனதில் எழும் போது என்ன செய்வது வீட்டிலிருந்து உடற்பயிற்சி செய்வது டாக்டர்கள் மூலமாக கவுன்சிலிங் கொடுப்பது மக்களிடையே டிஜிட்டல் மூலமாக தொடர்புகொண்டு அவர்களுக்கு ஒரு எனர்ஜி டானிக் ஆக இருக்கின்றார். https://www.facebook.com/anuhasan.india/
நமக்கு எல்லாம் தேவைப்படும் மன சம் நிலை ஆரோக்கியம் குறித்து அனைத்து கவுன்சிலிங்குகளை அனுஹாசன் மூலம் கற்றுக் கொள்ளலாம். அவருடைய லிங்கினை இங்கு வைத்துள்ளோம் . என்ன எல்லாம் உருப்படியாக லாக்டவுனில் செய்யலாம் செடிக் கொடிகளிடம் பேசுவது உடற்பயிற்சி செய்வது, காய்கறி விற்பனையாளரிடம் பேசுவது போன்ற அனைத்தையும் அவர் செய்திருந்தார், நம்மை செய்ய சொல்ல வலியுறுத்தவில்லை ஆனால் அவர் என்ர்ஜியை பார்க்கும் பொழுது நாமே செய்யலாம் என தோனும்.