விளையாட்டு

ஆசிய கிரிக்கெட் கோப்பை ஜூன் 2021 வரை தள்ளிவைப்பு

ஆசிய கிரிக்கெட் கோப்பை ஜூன் 2021 வரை தள்ளிவைப்பு. ஆசிய கோப்பை தொடர்பாக ஆசிய கிரிக்கெட் ஆணையத்தின் சார்பில் செயற்குழு ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்று வந்தது.

இந்த கூட்டத்தின் இறுதியில் ஆசிய கோப்பையை ஜூன் 2021 வரை தள்ளி வைப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஆசிய கிரிக்கெட் ஆணையம் திட்டமிட்ட தேதியில் ஆசிய கோப்பையை தொடங்க நினைத்ததாக தெரிவித்தது.

ஆனால் நாடுகள் கடந்து பயணிப்பதில் உள்ள கட்டுப்பாடுகள், தனிமைப்படுத்த வேண்டிய விதிமுறைகள், அடிப்படை சுகாதார பிரச்சனைகள், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டிய கட்டாயம், உள்ளிட்ட காரணத்தினால் ஆசிய கோப்பை ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணங்கள் மட்டுமின்றி கிரிக்கெட் நிர்வாகத்தினர், கிரிக்கெட் வீரர்கள், இதர பணியாளர்கள் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் கருதியும், தொடர் தள்ளி வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஜூன் 2021 ஆண்டு வரை தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு சரியான கால அட்டவணையை தேர்வு செய்யப்படுவதாகவும் கூறியுள்ளனர். ஆசிய நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் இணைந்து விளையாடும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்க இருந்தது. வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த போட்டி தள்ளி வைக்கப்படுவது தற்போது அறிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஜூன் 2021 ஆம் ஆண்டுவரை ஆசிய கோப்பை கிரிக்கெட் தள்ளி வைக்கப்படுவது ரசிகர்களின் ஆவலை குறைத்துவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *