அன்னை தெரசா பற்றிய ஒரு பார்வை
எல்லோருக்கும் உதவும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும். ஜாதி, மத, பாகுபாடு இன்றி அன்பு செலுத்த வேண்டும் என்று மென்மையாக சொன்னவர் அன்னை தெரசா. பிறரை எடை போடுவதில் காலம் தாழ்த்தினால், அன்பு செலுத்த நேரம் இருக்காது என்று கூறியவர்.
- 1910 ஆம் ஆண்டு அல்போனியா நாட்டில் பிறந்த தெரசா.
- ‘ஏழைகளிடம் அன்பு செலுத்தவே’, இறைவன் தன்னை படைத்திருப்பதாக உணர்ந்துள்ளார்.
- பிறரை எடை போடுவதில் காலம் கழிக்காமல் அன்பு செலுத்த வேண்டும்.
1910 ஆம் ஆண்டு அல்போனியா நாட்டில் பிறந்த தெரசா. கிறிஸ்தவ மதக் கோட்பாடுகளில் பெரும் ஈர்ப்பு ஏற்பட்டதால் பதினேழாவது வயதில் கன்னியாஸ்திரியாக மாறினார். கொல்கத்தாவில் ஆசிரியர் பணியில் தன்னை ஈடுபடுத்தி உள்ளார். கல்வி கற்பதை விட பள்ளிக்கு வெளியே ஏழைகளும், ஏழைகள் படும் துன்பங்களை கண்ட இவர் மனதையும், உடல் நலத்தையும் பாதித்தன.
ஏழைகளிடம் அன்பு செலுத்திய தெரசா
1946இல் நோயை குணபடுத்த டார்ஜிலிங் ரயில் வழியாக பயணம் செய்த இவர் ‘ஏழைகளிடம் அன்பு செலுத்தவே’, இறைவன் தன்னை படைத்திருப்பதாக உணர்ந்துள்ளார். இரண்டு ஆண்டுகள் தன்னை செவிலியர் பயிற்சி எடுத்து 1948 பொதுநலத் தொண்டர்களுடன் கொல்கத்தா சேரிப்பகுதியில் முழுமையாக நுழைந்தார்.
உண்மையில் பாதிக்கப்பட்டவர்களை ஆராய்ந்து பார்த்து உதவுவதால் நம் சேவைக்கு மரியாதை கிடைக்கும். இதை சொன்னவர்களை திரும்பிக்கூட பார்க்காமல், கண்ணில் தென்படுபவர்களுக்கு எல்லாம் அன்பை வழங்கினார். 12 சகோதரிகளுடன் தொடங்கப்பட்ட ‘நிம்மதியான மரணம்’ என தனி அமைப்பை ஏற்படுத்தினார்.
அன்னை தெரசா தொடங்கப்பட்ட அமைப்பு
அன்னை தெரசா வாழ்வை விட பலரது மரணம் ஆதரவின்றி மிகக் கொடுமையாக இருந்ததை கண்டதால் முதியவர்களை பராமரிப்பிற்கு என்று இந்த அமைப்பை உருவாக்கி உள்ளார். உலக முழுவதும் 100 நாடுகளில் சுமார் ஐம்பதாயிரம் அவர்களுடைய தொண்டர்களுடன் வளர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த அமைப்பு அனைவரையும் அன்புடன் நோக்கும். தெரசா உணவு பொருள் வீணாவதை பார்த்தால் மட்டும் கோபத்தின் உச்சிக்கு சென்று விடுவார். பட்டினியுடன் இருக்கும் எத்தியோப்பிய குழந்தைகளை பார்த்தா ஒரு பருக்கை கூட வீணாவதை தவிர்க்க முடியவில்லை என்று வருந்துவார்.
அன்னை தெரசா வாங்கிய நோபல் பரிசு
சமாதானத்துக்கான நோபல் பரிசு 1979ல் இவருக்கு கிடைத்தது. வழக்கமாக பரிசு வழங்கும் போது நடத்தப்படும் விருந்து விழாவினை தடுத்து நிறுத்தி, அதற்கென்று ஒதுக்கப்பட்டிருந்த தொகையினையும் ஆசிரமத்திற்கு வாங்கிக் கொள்வார். உலக மக்கள் அனைவருக்கும் இவர் விடுத்த வேண்டுகோள் அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டும் என்பது தான்.
புதிய தலைவருக்கான ஓட்டெடுப்பு
இரண்டு முறை இதய நோயால் பாதிக்கப்பட்டு தன் ஆசிரமத்தை கவனிக்க புதிய தலைவருக்கான ஓட்டெடுப்பு நடத்தினார். தெரசா எல்லா வாக்குகளை தெரசாவுக்கு ஆதரவாக இருக்க, ஒரே ஒரு வாக்கு மட்டுமே எதிர்த்து இருந்தன. அந்த ஒரு ஓட்டு தெரசா போட்டது தான். நிபந்தனை இன்றி அன்பு செலுத்தியதால் தான் எதிர்ப்பு என்றால் என்னவென்றே அறியாமல் 1997இல் மரணமடையும் வரை இவரால் வாழ முடிந்தது. பிறரை எடை போடுவதில் காலம் கழிக்காமல் அன்பு செலுத்த வேண்டும் என்பதை உயிர் மூச்சாகக் கொண்டவர் அன்னை தெரசா.