நடிகை ஜோதிகா பேசியதை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி முடிவு!!!
நடிகை ஜோதிகா விருது விழா ஒன்றில் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலை பற்றியும், தஞ்சாவூர் அரசு மருத்துவமனை பற்றியும் சர்ச்சையாக பேசியதால் பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஜோதிகா விருது விழா ஒன்றில் பங்கேற்று மேடையில் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலைப் பற்றியும், தஞ்சை அரசு மருத்துவமனை பற்றியும் சர்ச்சையாக பேசினார். சமீபத்தில் ஜோதிகா பங்கேற்ற விருது விழா நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அந்த விழாவில் பேசிய நடிகை ஜோதிகா, நான் ஒருமுறை தஞ்சாவூருக்கு படப்பிடிப்புக்காக சென்றிருந்தேன்.
ஷூட்டிங்
அங்குள்ள அனைவரும் புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலை என்னை பார்க்க சொன்னார்கள். ஆனால் அந்தக் கோவிலை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். உதயப்பூரில் இருக்கும் அரண்மனைகள் போலவே தான் அந்தக் கோவிலும் இருக்கிறது. அப்பொழுது தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் எனக்கு ஷூட்டிங் நடைபெற்றது. தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மிகவும் மோசமாக பராமரிக்கப்படுவதை நான் என் கண்ணால் பார்த்தேன். அதை நான் எப்படி என் வாயால் சொல்வது என்று கூட தெரியவில்லை.
மாவட்ட ஆட்சியர்
கோவில்களை சிறப்பாக பராமரிக்கும் அதே ஊரில் உள்ள அரசு மருத்துவமனை மிகவும் மோசமாக பராமரிக்கப்படுவது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கோவில்களுக்கு மிக பிரம்மாண்டமாக செலவு செய்து அழகாக வைத்திருப்பது போலவே பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் ஏன் செலவு செய்யக்கூடாது? பள்ளிகளும் மருத்துவமனைகளும் மிகவும் முக்கியமான ஒன்று. இதை நான் நடித்த ராட்சசி படத்தில் கூட சொல்லியிருக்கிறேன். இயக்குனர் கௌதம் ராஜுவும் இதையே தான் சொல்லி இருக்கிறார். ஜோதிகாவின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஜோதிகா மட்டுமில்லாமல் சிவக்குமார் குடும்பத்தார் அனைவரையும் விமர்சித்தும் வருகின்றனர்.
நெட்டிசன்
ஒரு நெட்டிசன் அப்போ உங்களுக்கு மட்டும் ஒரு கோடியில் கார் எதற்கு?? 5 கோடியில் வீடு எதற்கு?? 300 கோடியில் சொத்து எதற்கு?? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொரு நெட்டிசன் கோவில்களுக்கு பெயிண்ட் அவசியமா? என்று கேள்வி எழுப்பிய உங்களுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து விருது விழாவை ஏற்பாடு செய்வது எதற்காக? என்று கேட்க தெரியவில்லையா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அதிரடியாக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையை பார்வையிட சென்றிருக்கிறார். ஜோதிகா கூறியதை போல் ஏதாவது அந்த மருத்துவமனையில் குறை இருந்தால் அதை கண்டிப்பாக தான் நிவர்த்தி செய்து விடுவதாகவும் கூறினார். ஜோதிகாவை பத்தின கருத்துக்களை பதிவு பண்ணுங்கள். நன்றி!