ஆரோக்கியத்தையும் ஆயுளையும் பெற முன்னோர்களின் வழிகாட்டுதல்கள்
இளம் வயதிலேயே பலருக்கும் வயதான தோற்றத்தை ஏற்படுத்துகிறது. சிறு குழந்தைகளுக்கு தலைமுடி நரைக்க ஆரம்பித்து விட்டன. உடல் எடை அதிகரித்தது முதல் தூக்கத்தை தொலைத்தது வரை நம் வாழ்க்கை முறையே மாறிவிட்ட நிலையில், பொது முடக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. முன்னொரு காலத்தில் இருந்தே உணவு மற்றும் உடல் உழைப்பால் நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்தோடும் முன்னோர்கள் வாழ்ந்து வந்தனர்.
இவர்கள் பயன்படுத்திய பாத்திரங்களும் ஒரு காரணமாக இருக்கலாம். அதிகமாக மண் பாத்திரங்களையே பயன்படுத்தினர். குறிப்பாக இரும்பினாலான பாத்திரத்தை பயன்படுத்தும் போது நான்ஸ்டிக்கைவிட ஆரோக்கியமானதாக இருக்கிறது. இரும்பு பாத்திரங்கள் அனீமியா போன்ற இரும்புச் சத்து குறைபாடு உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கிறது இரும்பு பாத்திரங்கள்.
குழந்தையின்மை, தைராய்டு, பிசிஓஎஸ் போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. தற்காலத்தில் இது போன்ற பிரச்சனைகளுக்கு மைக்ரோ ஊட்டச்சத்து குறைபாடுகளும், ஹீமோகுளோபின் குறைபாடுகள் காரணமாக உள்ளன. இவை பொதுவான காரணங்கள். இவற்றிற்கு இரும்பாலான பாத்திரங்களில் சமைப்பதால் ஒரு தீர்வு கிடைக்கலாம். இவை நான்ஸ்டிக் கைவிட ஆரோக்கியமானது.
முடி உதிர்வு, உடல் சோர்வாக இருப்பது. மன நல பிரச்சனைகள் இவற்றிற்கு நல்ல தீர்வாக இருக்கும். உடலில் தேவையான அளவு ஹீமோகுளோபின் இருக்கும் போது மூளை மற்றும் உடல் தேவையான ஆக்சிஜனை பெற்றுவிடும். தினசரி உடற்பயிற்சி செய்பவர்கள் அதன் பலனை கிடைக்காமல் போவதற்கு ஹீமோகுளோபின் குறைபாடு முக்கிய காரணமாகும்.
ஆக இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வைத் தரும் இரும்பு பாத்திரங்கள். அதிகப்படியான குறைபாடுகள் இருந்தால் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும். சமைக்கும் உணவின் அளவிற்கு ஏற்றவாறு பாத்திரத்தின் அளவு இருப்பது சாலச் சிறந்தது.