விழாக்கால விற்பனைக்கு வியூகம் வகுக்கும் அமேசான்
கடந்த 5 மாதமாக மக்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். உலகெங்கும் ஒரே ஒரு மந்திரம் அந்த கொரோனா பெயரானது அனைவரையும் ஆட்டி படைத்தது என்று கூறலாம். அதாங்க அந்த கொரோனா தொற்றை, வைரஸ் இதன் தொல்லையால் மக்கள் நொந்து போகின்றனர்.
பல்வேறு மக்கள் வேலைகள் இழந்து வீட்டில் இருக்கின்றனர். ஒருசிலர் சம்பாத்தியம் நடத்துகின்றனர். வருகின்ற செப்டம்பர் மாதத்திற்கு பின் இந்தியாவில் அதிக விழாக்காலம் இருக்கும். ஆனால் கோலாகல கொண்டாட்டங்கள் இருக்கும்.
கொரோனா மக்களை கூறு போட்டு அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் கொண்டாட்டங்கள் எல்லாம் எப்படி செய்வது என மக்கள் நிச்சயம் சிந்திப்பார்கள். இந்தக் கொண்டாட்டங்களில் இருந்து உதவுவார்கள் என்ற தகவல்கள் கிடைக்கின்றன.
இதனை அமேசான் போன்ற நிறுவனங்கள் ஈசியாக எதிர்கொள்ள வேண்டும் என்று பொது திட்டங்களை அறிவிக்கவுள்ளது. தள்ளுபடிகளை எல்லாம் அள்ளி வீசி கைவசம் இருப்பதை தீர்க்க செய்து வருகின்றது.
விநாயகர் சதுர்த்தி, ரக்ஷா பந்தன், கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, பொங்கல், நவராத்திரி போன்ற பண்டிகைகள் எல்லாம் இனி அடுத்தடுத்து வரும் இதனைக் குறித்து மக்கள் சொல்கிறார்களோ இல்லையோ அமேசான் போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் அடுத்த டார்கெட் வைத்துவிட்டனர்.
இந்த பண்டிகை காலத்தில் மக்கள் வாங்குவதற்கு ஏற்ப விற்பனையை தொடங்க வேண்டும் என்று இவர்கள் திட்டங்களை தீட்டி வருகின்றனர். அவர்களுக்கு திட்டங்கள் என்னவென்றால் எச்டிஎஃப்சி கார்டு போல்டர்களை நீங்கள் உங்களுக்கு மட்டும் 10 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்படவுள்ளது.
இந்த விற்பனையானது மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க போடப்படும் திட்டங்களாகும். அமேசான் 300க்கும் மேற்பட்ட பொருட்களை விற்க திட்டம் தீட்டி வருகின்றனர்.
நாம் வாங்க வேண்டுமென்று நமது பாக்கெட்டில் காலி செய்ய ராக்கெட்டுகள் விட்டு வருகின்றனர் தகவல்களும் கிடைக்கின்றன. பார்த்து உசாராக இருங்கள். செலவு செய்யும் போது கவனம் என்பது அவசியம். செய்து விட்டு பிறகு திரும்பிப் பார்த்தால் ஒன்றும் இருக்காது.