எமி ஜாக்சன் வைரலாகும் வீடியோ
‘மதராசபட்டினம்’ படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான எமி ஜாக்சன் தாய்மை தினத்தன்று தனக்கு குழந்தை பிறந்த மகிழ்ச்சியை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தாய்மை தினத்தன்று நான் ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறேன். தன் பையன் ஆண்ட்ரியாஸ் வருவதற்கு முன்பாக என் வாழ்க்கையை நான் நினைவு கூற முடியவில்லை.
அதெல்லாம் அர்த்தமற்றதாக இருக்கிறது. அந்த தேவதை முகத்தையும், அழகிய சிரிப்பையும், ஒவ்வொரு நாள் காலையிலும் பார்க்கும் போது நான் உத்வேகம் அடைகிறேன்.
ஒரு ரோல் மாடலாக, பாதுகாவலராக, நண்பராக மற்றும் தாயாக நான் ஆண்ட்ரியாஸ்காக இருக்கிறேன் என்று அந்த பதிவில் எமிஜாக்சன் தெரிவித்திருக்கிறார்.
தன் அருந்தவப் புதல்வன் முதல் பிறந்தநாளை கொண்டாடி இதன் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளார். இதில் குழந்தை முகம் மலர்ந்த சிரிப்புடன் பந்தை வைத்துக் கொண்டு விளையாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
பிரிட்டனில் வசிக்கும் இவர் தன் அழகிய குழந்தையின் ஸ்பெஷல் டே என்ற தலைப்பில் வீடியோவை பதிவிட்டுள்ளார். குழந்தையின் முதல் பிறந்த நாள் தருணங்களும் இடம் பெற்றுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பரில் எமிஜாக்சன் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தன.