செய்திகள்

விவாகரத்துக்கு காரணம் இது தான்..? அசர வைத்த பாஜக

மும்பையில் 3% விவாகரத்துகளுக்கு போக்குவரத்து நெரிசல்தான் காரணம் என அம்ருதா ஃபட்னாவிஸ் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவியும் பாடகியுமான அம்ருதா ஃபட்னாவிஸ், ஆளும் மகாராஷ்டிர விகாஸ் அகாடி (எம்.வி.ஏ) அரசாங்கத்தைத் விமர்சித்து பேசினார். அப்போது மும்பையில் போக்குவரத்து நெரிசல்கள் தான் 3 சதவீத விவாகரத்துகளுக்குக் காரணம் என்று கூறி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், இதை ஒரு சாமானிய குடிமகனாக சொல்கிறேன். ஒருமுறை வெளியே சென்றால் பள்ளங்கள், போக்குவரத்து உள்ளிட்ட பல பிரச்னைகளை பார்க்கிறேன். போக்குவரத்து நெரிசல் காரணமாக குடும்பத்தினருக்கு நேரம் கொடுக்க முடியாமல் மும்பையில் 3 சதவீத விவாகரத்துகள் நடக்கின்றன. எனவே, மாநில அரசு தனது தவறுகளில் அதிக கவனம் செலுத்துமாறு நான் அறிவுறுத்துகிறேன்” என்று அம்ருதா ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவரது பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள, சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி “சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக 3% மும்பை வாசிகள் விவாகரத்து செய்கிறார்கள் என்று கூறும் பெண்ணுக்கு இந்த நாளின் சிறந்த (IL) லாஜிக் விருது வழங்கப்படுகிறது என கிண்டலாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *