தற்சார்பு வாழ்க்கை முறையை கற்றுக்கொடுக்கும் அம்மி சந்தை..!
அனாடமிக் தெரபி நடத்தும் திரு ஹீலர் பாஸ்கர் அவர்களின் குழுவால் நடத்தப்படும் தற்சார்பு முறை வாழ்க்கையின் வகுப்புகள் இன்று திருப்பூரில் நடைபெறுகின்றது.
நவம்பர் 25, 2018 ஞாயிறு இன்று திரு. ஹீலர் பாஸ்கர் மதிவாணன் குழுவினால் நடத்தப்படும் தற்சார்பு முறை வாழ்க்கையின் வகுப்புகளில் வீட்டிலே தயாரிக்கப்படும் 42 பொருட்களை பற்றிய விவரங்கள் கொடுக்கப்படும்.
தற்சார்பு முறை வாழ்க்கையில் வகுப்புகளில் வீட்டில் உபயோகப்படுத்தப்படும் ரெடிமேட் மாவு, கேக், ரியூஸ்பூல் நாப்கின், சென்ட், தயிர் போன்ற பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள் எவ்வாறு தன்னிச்சையாக தயாரித்தல் அவற்றை எவ்வாறு பயன்படுத்துதல் போன்றவை அனைத்தும்,
இக்குழுவானது கற்றுக் கொடுக்கின்றது. எந்தவித கட்டணமும் இல்லாமல், மதிய உணவுடன் தற்சார்பு வாழ்க்கையை நடத்த கற்றுக் கொடுக்கப்படும் முறையினை கற்றுக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் வரலாம். மத்திய உணவு இலவசம். வகுப்புகள் அனைத்தும் இலவசம்.
ஏற்கனவே சென்னை, கோயமுத்தூர் போன்ற இடங்களில் நடத்தப்பட்டு வந்த தற்சார்பு வகுப்புகள், இப்போது திருப்பூரில் நடைபெற்று வருகின்றது.
அம்மி சந்தை:
அம்மி சந்தை என்ற பெயரில் தற்சார்பு வாழ்க்கை நடத்த தேவைப்படும் 42 பொருட்களை தயாரிக்கும் முறை, மேலும் அவற்றை வணிக படுத்துதல் போன்றவற்றையும் கற்றுக்கொடுக்கும் முறையினை கோவையில் உக்கடம் அருகில் அம்மி என்னும் பெயரில் சந்தையாக நடத்தப்படுகின்றது. விருப்பமுள்ளோர் எப்பொழுது வேண்டுமானாலும் பங்கேற்று கற்றுக்கொள்ளலாம். தேவையான பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். அம்மி சந்தை கோவையில் நிரந்தரமாக நடத்தப்படுகின்றது. அதன் விவரங்கள் மேலேயுள்ள படத்தில் எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
அம்மிச் சந்தை யில் வாங்க, விற்க, கற்க, காண:
அம்மிச் சந்தையில் தேவையான பொருட்களை வாங்கலாம். கெமிக்கல் இல்லாத வீட்டுத்தயாரிப்புகளை விற்கலாம், மேலும் நீங்கள் தயாரிக்க விரும்பும் பொருட்களை குறித்து கற்றுக் கொள்ளலாம். மேலும் தினமும் காட்சிக்கு எனவும் தயாரிக்கப்பட்ட பொருட்கள் இருக்கும்.
திரு ஹீலர் பாஸ்கர் அவர்களின் இந்த மருத்துவமுறை வாழ்க்கையானது. மிகுந்த பயனுள்ளதாக மக்களை நோய்களிலிருந்து காப்பதாக, நம்மைச் சுற்றியுள்ள வணிக நோக்கங்களை அறிந்து கொள்ளவும் உதவியாக இருக்கின்றது. மேலும் கெமிக்கல் இல்லாத வாழ்க்கை முறை ஆதரித்து மக்களுக்கு உதவும் எண்ணத்துடன் அவர் நடத்தும் இந்த நிகழ்வுக்கு தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கின்றது.
மேலும் ஹீலர் பாஸ்கரின் அனாடமிக் தெரபி யூடியூப் மூலம் உடல்நலம் குறித்த அனைத்து குறிப்புகளும் கிடைக்கப் பெறலாம். சமுதாயத்திற்கு பாதுகாப்பாகவும், பாமர மக்களுக்கு விழிப்புணர்வை தரும் நோக்கங்களையும், முயற்சிகளையும் மக்கள் என்றும் வரவேற்கின்றனர்.
அந்த வகையில் ஹீலர் பாஸ்கர் அவர்கள் மக்களின் மரியாதைக்குரியவராக திகழ்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், போன்ற மொழிகளிலும் புத்தகங்களாக கிடைக்கின்றது. மேலும் அமைதியும் ஆரோக்கியமும் என்ற தலைப்பில் மாதா நூல்கள் கிடைக்கின்றன. அவற்றை சந்தா மூலம் பெறலாம்.