டிஜிட்டல் நாயகி அம்மா சமையல் மீனாட்சி அம்மா
ஒவ்வொருவரும் இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பார்கள். ஒரு சிலருக்கு கோ வித் ஃப்ளோ என்று இருக்கும். ஒரு சிலருக்கு இதுதான் நான் இப்படித்தான் நான் என்று பயணம் இருக்கும். ஒரு சிலர் வாழ்வில் மிகுந்த சவால்களை சந்தித்து பல ஏற்ற இறக்கங்களுக்கு பின் வாழ்வை வெற்றிகரமாக நடத்தி பலருக்கு எடுத்துக்காட்டாக இருப்பார்கள். மேலும் தன்னடக்கத்துடன் வாழ்வை கடக்க முயல்வார்கள் அவர்கள் அனைவரும் நாம் அறிந்து கொள்ள வேண்டியவர்கள். தெரிந்து கொள்ள வேண்டியவர்கள். அவர்களிடம் நாம் கற்க வேண்டியது ஆயிரம் இருக்கும். சிலேட்டு குச்சி அம்மா சமையல் மீனாட்சி அம்மா அவர்களை பற்றி இங்கே எழுதுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றது.

அம்மா சமையல் மீனாட்சி அம்மா
அம்மா சமையல் மீனாட்சி அம்மா பலருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறார். இந்த டிஜிட்டல் உலகில் நாம் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான சாதனைப் பெண்மணிகளில் இவரும் ஒருவர் ஆவார். மீனாட்சி அம்மா சென்னையைச் சேர்ந்தவர். இவர் youtube இல் கலக்கி வரும் முக்கியமானவர்களில் ஒருவராவார். இவர் ஆரம்பத்தில் சிறிய அளவில் சமையல் பதிவை கொடுக்க தொடங்கினார். அதன் பின்பு பெரிய பெரிய அளவில் சமையல் முறையையும் நமக்கு கற்பித்தார்.
மீனாட்சி அம்மாவின் இலட்சக்கணக்கான சப்ஸ்க்ரைபர்கள்
மீனாட்சி அம்மா அவர்கள் இன்று இலட்சக்கணக்கில் சப்ஸ்கிரைப்ர்களை தன் பக்கம் கொண்டு தனது வாழ்வின் சவாலான பக்கங்களை நம்முடன் பகிர்ந்தார். மீனாட்சி அம்மா அவர்கள் தற்கொலை முயற்சி மற்றும் தனது மூத்த மகனை இழந்து இருக்கின்றார். வாழ்வில் பல போராட்டங்களை வென்று சொந்தமாக வீடு கட்டி அங்கு காய்கறி கடை நடத்தி மேலும் மாடிவீட்டு தோட்டக்கலை சிறப்பாக செய்து வருகின்றார். மீனாட்சி அம்மாவின் மின்னல்வேக சிரிப்பும் வேகமான செயல்பாடும் நமக்குப்பாடமாகும்.

வாழ்வில் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அதனை முறியடித்து உழைப்பு ஒன்றை மட்டும் முதலீடாக போட்டால் வெற்றி நிச்சயம் என்பதற்கு மீனாட்சி அம்மா அவர்கள் நமக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறார் இவரைப் போன்று அனைவரும் விடா முயற்சியால் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வாழ்வில் வெற்றி அடைவீர்.