அமிதாப்புக்கு கொரோனா ரஜினி நலம் விசாரிப்பு!
அமிதாப்பச்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து மொபைல் மூலம் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
இதனையடுத்து கமலஹாசன் அவர்களும் நலமோடு இருக்கவேண்டுமென அமிதாப்பச்சனுக்கு நலம் விசாரிப்பு இதன்மூலம் தெரிவித்தார்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவருடைய மகன் அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சிகிச்சைக்காக இருவரும் மருத்துவமனையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சாதாரண மக்கள் நிலை இன்னும் சற்று கடினமாக இருக்கும்.
ஆகையால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் டிவிட்டர் மூலம் அமிதாபச்சன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் நலம் விசாரிப்பு மூலம் கமல்ஹாசன் டிவிட்டர் பக்கத்தில் கொரோனாவில் இருந்து மீண்டு வர வேண்டும். அது மிகச்சிறந்த சாதனையாக இருக்கும். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்று கமலஹாசன் அவர்கள் கருத்து தெரிவித்திருந்தார்.
சாமானிய மக்கள் அனைவரும் சற்று பயந்து போய் உள்ளனர். பெரிய நடிகர்களான அமிதாப் மற்றும் அபிஷேக் இருவருக்கும் கொரோனா உறுதி என்பதால் நமது நிலையெல்லாம் என்ன ஆகும் என்று படபடப்பும் பயமும் மக்களிடையே அதிகரித்து காணப்படுகின்றது.
இதனால் இதனை வைத்து எல்ஐசி பாலிசி எடுக்கும் பணிகளும் ஆங்காங்கே பரவியுள்ளது என தகவல்கள் கிடைக்கின்றன. மக்கள் கவனமாக இருக்க வேண்டும். வெளியில் சென்று வந்ததும் வீட்டில் பக்கெட்டில் கல் உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரினை கை கால் முகம் கழுவி கொள்ளவும்.

நெல்லிக்காயை தினமும் சாப்பிட வேண்டும் அத்துடன் எலுமிச்சைச் சாறு இரண்டு நாளுக்கு ஒரு முறையாவது குடித்துவர வேண்டும். மிளகு ரசத்தை மக்கள் செய்து சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியம் பெருகும். இந்த நேரத்தில் வெளியில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக பேக்கிங் பண்டங்களை தவிர்ப்பது முக்கியமானதாகும். வெளியில் தங்கி இருக்கும் பணியாட்கள் மேகி போன்ற இன்ஸ்டன்ட் பொருட்களை தவிர்ப்பது என்பது நல்லதாகும்.
அது உடலுக்கு ஆரோக்கியமானது அல்ல
பார்த்து பத்திரமாக இருக்கவும். மக்களே உடல் ஆரோக்கியம் என்பது எல்லாவற்றையும் விட மிகவும் அவசியமாகும்.
தைரியமாக இருக்க வேண்டும். இதைத் தொட்டால் நோய் வந்துவிடும் அதை தொட்டால் தொற்று உறுதியாகும் என்ற பயமும் அச்ச உணர்வு ஆகியவற்றை அறவே ஒழிக்க வேண்டும். எல்லாம் நலமாக அமையும் நம்பிக்கையுடன் இருப்போம் உடற்பயிற்சியுடன் ஆரோக்கியம் காப்போம்.