உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால்… அதிரடி காட்டும் ஐரோப்பிய ஒன்றியம்!!
ரஷ்யா உக்ரைனைத் தாக்கும் பட்சத்தில் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளின் கீழ் மாஸ்கோவிற்கு நிதிச் சந்தைகள் மற்றும் உயர் தொழில்நுட்பப் பொருட்கள் சேர்க்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகக் குழுவின் தலைவரான உர்சுலா வான் டெர் லேயன்’இன் கருத்துக்கள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் நோக்கங்கள் மீதான பதட்டங்கள் தீவிரமடைந்த நிலையில் வந்துள்ளது. முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க முடிவு செய்துள்ளார் என தனக்கு நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளதாக கூறியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கிரெம்ளினின் இந்த ஆபத்தான சிந்தனை, ரஷ்யாவின் வளமான எதிர்காலத்தை இழக்கக்கூடும் என்று வான் டெர் லேயன் இன்று நடந்த வருடாந்திர மியூனிக் பாதுகாப்பு மாநாட்டின் போது கூறினார். அங்கு அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸும் பேசினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகப் பிரிவு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடாவுடன் இணைந்து இந்த நிதித் தடைகளின் வலுவான மற்றும் விரிவான தொகுப்பை உருவாக்கியுள்ளது என்று வான் டெர் லேயன் கூறினார்.
“ரஷ்யா தாக்கினால், ரஷ்ய பொருளாதாரத்திற்கான நிதிச் சந்தைகளுக்கான அணுகலை நாங்கள் கட்டுப்படுத்துவோம் மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்து ரஷ்யா தனது பொருளாதாரத்தை நவீனமயமாக்குவதற்கும் பன்முகப்படுத்துவதற்குமான வாய்ப்பை நிறுத்துவோம். எங்களிடம் ஏராளமான உயர் தொழில்நுட்ப பொருட்கள் உள்ளன, அங்கு நாங்கள் உலகளாவிய ஆதிக்கம் செலுத்துகிறோம். மேலும் அவை ரஷ்யாவிற்கு முற்றிலும் அவசியமானவை மற்றும் எளிதில் மாற்ற முடியாது.” என்று அவர் மேலும் கூறினார்.