சினிமா

சந்தாதாரரை சளிக்க விடாத அமேசான் பிரைம் அப்டேட்ஸ்

அமேசன் பிரைமில் அடுத்த அடுத்த அப்டேட். புத்தம் புது காலையின் மெயின் போஸ்டரை இயக்குனர் மணிரத்னம் ரிலீஸ் செய்ய அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு குறும்படத்தின் தனித்தனி போஸ்டரும் வெளியானது.

புத்தம் புது காலை ஐந்து குறும்படங்களின் தொகுப்பாக 5 இயக்குனர்களால் இயக்கப்பட்டுள்ளது. அந்த ஐந்து குறும்படத்தின் தனித்தனி போஸ்டர் இதோ.

ரியூனியன்

ஆண்ட்ரியா, லீலா சாம்சன் மற்றும் சிக்கில் குருசரண் இணைந்து கலக்கும் ரியூனியன் குறும்படத்தை இயக்கியவர் ராஜீவ் மேனன்.

இளமை இதோ இதோ

ஜெயராம், காளிதாஸ் ஜெயராம், ஊர்வசி மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் என வெவ்வேறு வயதில் இருக்கும் இரண்டு ஜோடிகளும் ஊரடங்கில் எவ்வாறு நேரத்தை செலவிடுகின்றனர் என்பதை பிரதிபலிக்கும் இளமை இதோ இதோ குறும் படத்தை இயக்கியவர் சுதா கொங்கரா.

காபி, எனி ஒன்?

சுகாசினி மணிரத்னத்தின் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் குறும்படம். மேலும் அனுஹாசன் மற்றும் ஸ்ருதி ஹாசன் என ஹாசன் குடும்பத்தின் குறும்படமாக காபி, எனி ஒன்? பிரதிபலிக்கிறது.

அவரும் நானும்/அவளும் நானும்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நாயகி ரீது வர்மா மற்றும் பாஸ்கர் இணைந்து நடித்துள்ள குறும்படம். இருபத்தொரு நாள் ஊரடங்கில் ஒன்றாக வாழும் தாத்தா பேத்தி வாழ்க்கையைச் சித்தரிக்கும் அவரும் நானும்/அவளும் நானும்.

மேலும் படிக்க : அழகிய சிருக்கி அருவா மூக்கி…பாடல் க/பெ ரணசிங்கம்

மிராக்கில்

திருட்டுப்பயலே பாபி சிம்ஹா மற்றும் முத்து குமார் என இரண்டு வாலிபரின் ஊரடங்கு வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் வரும் குறும்படம் மிராக்கல்.

புத்தம் புது காலைக்காக பத்து நாட்கள் காத்திருக்கும் இந்த வேளையில் அமேசான் பிரைம் ரசிகர்களை சிதறவிடாமல் தன்னகத்தே வைத்துக் கொள்ள என்ன பாடுபடுகிறது! தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் அமேசான் பிரைமில் ரிலீஸும் ட்ரெய்லரும் வந்து கொண்டே இருக்கிறது.

மேலும் படிக்க : சினிமா உலகின் தலையாய விருதான ஆஸ்கர் தள்ளிப் போகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *