சினிமா

செம பட்டாளத்துடன் டைம் என்ன பாஸ்

அமேசான் பிரைமில் திரைப்படங்கள் மட்டும் ரிலீஸாகாமல் வெப் சீரிஸ் என்று சொல்லப்படும் தொடர் நிகழ்ச்சிகள் ரிலீஸாகி பெரிய வரவேற்பைப் பெறுகிறது.

தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி கன்னடம் என பல மொழிகளில் செயல்பட்டு வரும் அமேசான் ப்ரைம் அனைத்து மொழிகளிலும் தனக்கென்று தனித்துவமான வெப் சீரிஸை வெளியிட்டு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெறுகிறது.

ஹிந்தியில் ப்ரீத் இரண்டு பகுதிகள், பாதாளலோக், மிர்சாபூர் என பல வெப் சீரிஸ்கள் பெரிதாக வரவேற்கப்பட்டது. தமிழில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஸ்டான்டப் காமெடி நிகழ்ச்சிகளையே அமேசான் ஒரிஜினலில் ஒளிபரப்பப்பட்டது. ஸ்டான்டப் காமெடியன் என்று சொல்லப்படும் மேடை நகைச்சுவையாளிகன் நிகழ்ச்சிகள் பெரிதாக வரவேற்கப்பட்டது.

எஸ். ஏ. அரவிந்த், அலெக்ஸ், பிரவீன் குமார், கார்த்திக் போன்ற பலர் மக்களை சிரிக்க வைப்பதற்காக கடுமையாகப் பாடுபடுகிறார்கள் என்றே கூறலாம். அமேசான் ஒரிஜினலில் மெட்ராஸி டா, அலெக்ஸ் இன் வொண்டர்லாண்ட், மிஸ்டர் ஃபேமிலி மேன் என்ற நிகழ்ச்சிகள் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றதோடு தற்போது காமிக்ஸ்தான் செம காமெடிப்பா என்ற நிகழ்ச்சி ஸ்டான்டப் காமடியன்ஸின் சங்கமமாக அமைந்து கிட்டத்தட்ட ஏழுலிருந்து எட்டு மணி நேரம் ரசிகர்களை சிரித்தே சோர்வடையவைத்துள்ளது.

புது ரிலீஸ்

வரும் வெள்ளிக்கிழமை 18 செப்டம்பர் 2020 டைம் என்ன பாஸ் என்ற வெப் செரீஸ் அமேசன் பிரைம் ஒரிஜினலில் வெளியாகிறது. இன்று 15 செப்டம்பர் 2020 அதனுடைய ட்ரெய்லர் வெளியானது.

பொறியாளர்கள் தினத்தை முன்னிட்டு பொறியாளரின் கதையின் டிரைலர் வெளியிடப்பட்டதோ!

திரைப்படத்திற்கு முன் இயக்குனர்களின் குரலில் துவங்கும் காணொளியை போல் இங்கு நடிகர் பார்த்தீபன் குரலில் ட்ரெய்லர் துவங்குகிறது. பரத் நிவாஸ் பொறியியல் பட்டப்படிப்பை முடித்து ஐடியில் பணிபுரியும் வாலிபனாக என்ட்ரி கொடுக்கிறார்.

24 மற்றும் இன்று நேற்று நாளை போன்ற படத்தில் பார்த்த டைம் டிராவல் என்னும் அறிவியல் சார்ந்த நிகழ்வை ‘டைம் என்ன பாஸ்’ கதையில் சற்று புதுவிதமாக புகுத்தியுள்ளனர்.

பிரியா பவானி சங்கர், ரோபோ ஷங்கர், கருணாகரன், அலெக்ஸ் மற்றும் சஞ்சனா சாரதி போன்றவர்கள் வெவ்வேறு காலகட்டத்திலிருந்து தற்போது பரத் வாழும் காலத்திற்கு வந்து செய்யும் கூத்தே இந்த கதையின் தளமாக அமைகிறது. அசோக் செல்வன் மற்றும் மொட்ட ராஜேந்திரன் இந்த பட்டாளத்தை இணைகிறார்கள். மொத்தத்தில் இந்தக் கதை களம் மக்களை சிரிப்பு வெள்ளத்தில் மூழ்கடிக்கும் என யூகிக்கப்படுகிறது.

டைம் என்ன பாஸ் கதை சுபு மற்றும் கீர்த்தி எழுத்தில் சுபு நரு இயக்கத்தை கவிதாலயா தயாரிப்பில் வரும் வெள்ளிக்கிழமை அன்று நம் வீடுகளைத் தேடி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *