வாழ்க்கை முறைவாழ்வியல்

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள். உண்மைக்காக எதையும் துறக்கலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்க கூடாது. கீழ்ப்படியக் கற்றுக் கொள்ளுங்கள். கட்டளையிடும் பதவி தானாக உங்களை வந்து சேரும்.

எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாட படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ்; பொய் சொல்லி தப்பிக்காதே, உண்மையை சொல்லி மாட்டிக்கொள். பொய் வாழ விடாது. உண்மை சாக விடாது.

தோல்விகளைப் பற்றி கவலைப் படாதீர்கள். லட்சியத்திலிருந்து 1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும், திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள். அந்த ஆயிரம் தடவை தவறினாலும் இன்னும் ஒருமுறை முயலுங்கள். முயற்சியை கைவிடாதீர்கள்.

நீங்கள் பட்ட துன்பத்தை விட அதில் நீங்கள் பெற்ற அனுபவமே சிறந்ததாக அமையும். பிறரது பாராட்டுக்கும், பழிக்கும் செவி சாய்த்தால், மகத்தான காரியம் எதையும் செய்ய இயலாது.

வலிமையே மகிழ்ச்சிகரமான, நிரந்தரமான, வளமான, அமரத்துவமான வாழ்க்கையாக இருக்கும். பகை, பொறாமை ஆகியவற்றை வெளியிடுவதால், வட்டியும், முதலுமாக திரும்ப நம்மிடமே வந்து சேரும் என்பதை மறவாதீர்கள்.

நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு. சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர கடவுளுக்கும், சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.

இதயம் சொல்வதை செய். வெற்றியோ, தோல்வியோ அதை தாங்கும் சக்தி அதற்கு மட்டும் தான் இருக்கிறது. உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது, மிகப் பெரிய பாவம். உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே இருக்கின்றன.

அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு. வெற்றிகளை சந்தித்தவன் இதயம் பூவைப் போல் மென்மையாக இருக்கும். தோல்வி மட்டுமே சந்தித்தவர்களின் இதயம் இரும்பை விட வலிமையாக இருக்கும்.

நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனது தான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று தான் சொல்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *