தெறிக்க விட்ட தோனி, கற்றுக் கொண்ட பாடம்
ஐபிஎல்லில் தோனியின் 100வது கேட்ச் வெற்றிகரமாக 3 நாட்கள் முன்பு தோனி பிடித்து அசத்தினார். சிஎஸ்கே மேட்சில் நேற்று தோனி தெறிக்கவிட்டது. தோனிபிடித்த கேட்சானது அனைத்து இந்திய ரசிகர்களின் ஸ்டேட்டஸ் பாக்சை நிறைத்துவிட்டது.
சிஎஸ்கே தோனி கேட்ச்
தலைவர் முன்னாடியே பிளான் செஞ்சு தூக்குனாறு. பந்தை லாவகமாக அடித்துப் பேட்டில் பட வைத்துக் கையில் பிடித்தது வர்ணனைகள் அருமையாக இருந்தன. அதனால் இந்தக் காட்சியைப் பார்க்கப் பரவசமாக இருந்தன, இதுவரைக்கும் கிரிக்கெட் பார்க்காதவர்கள் எல்லாம் அப்படி என்ன கேட்ச் பிடிச்சாருன்னு பார்த்தாங்க, இந்தியர்கள் அதுவும் சிஎஸ்கே பாக்ஸ் எல்லாமே நிரம்பி போச்சு… வாழ்த்துக்கள் தோனி…
தோனியிடம் கற்க வேண்டும்
கத்தி பார்வை, ஃபோகஸ் அருமையா இருந்தது. அவரு பிடித்த கேட்ச் நழுவியபோதும் அத ஃபாலோ செஞ்சு பிடிச்சவிதம் வேற லெவல் தோனிகிட்ட இருந்து ஒவ்வொரு சராசரி மனுசனும் கத்துக்கனும்.
கத்திப் பார்வை பட்டைத்தீட்டிய தோனி
எந்தச் சூழ்நிலையிலும் கவனத்தை அப்படியே நிலைத்து கொண்டு செய்த விதம், பந்து நழுவிய போதும் அதை அவர் கணித்த விதம் படி தொடர் சென்று பந்தைத் தன் வசம் வரச் செய்தார் அதிலிருந்து நமது இலக்கானது எப்படி இருக்கனும். கத்திப் போன்று புத்தியை பட்டை தீட்டி, அனல் தெறிக்கும் வேகத்தைக் கட்டுக்குள் வைத்துச் செயல்பட அவருடைய கேட்ச் கற்றுக் கொடுத்தது. நமது இலக்கிலும் நழுவும் வாய்ப்பு வரலாம் ஆனால் கவனத்தை சரியாக வைத்தால் சாதிக்க முடியும்.
நிதானமாக செயல்பட்ட தோனி
இந்திய கிரிக்கெட்டில் தோனி பொறுமையின் பிதாமகன் நிதானத்தின் தலைவன், இந்திய அணியின் முன்னாள் தலைவர் தோனி ஐபிஎல் அணியில் அவர் பிடித்த கேட்ச் ஆனது பிரமிப்பை உண்டு செய்தது. நிச்சயமாக இப்படியொரு தருணத்தில் தோனியை தவிர வேறு எவரும் நின்றிருந்தாலும் பிடித்து இருக்க முடியுமா என்ற கேள்வி எழுகின்றது.
தோனியின் விளையாட்டு முதிர்ச்சி
அவ்வளவு பொறுமை நிதானம் தவறவிட்ட பந்தைத் தளராமல் பிடித்த மனது தோனியின் முதிர்ச்சி அனுபவம் காட்டியது இது அவருடைய கட்டுப்பாட்டைக் காட்டுகின்றது. அணியில் அவருடைய நிலைப்பாட்டை உறுதி செய்கின்றது. இது போன்ற விளையாட்டு வீரர்கள். கிரிக்கெட் அணிக்கு மட்டுமல்ல தேசத்தில் உள்ள ஒவ்வொரு துறைக்கும் தேவைப்படுகிறார்கள் .
வாட்சப்பில் இடம் பிடித்த தோனி கேட்ச்
தோனி வேற லெவல் வெற்றி தந்த காட்சி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. பந்து மேலே ஏறித் திரும்பவும் கைக்குள் வர வரைக்கும் அதை ஃபாலோ பண்ணி புடிச்ச வந்த விதம் இருக்கு வேற லெவல்
சிஎஸ்கேவின் ஐபிஎல் விளையாட்டு தோனியின் அந்த அபூர்வ கேட்ச்சானது அனைத்து தமிழ் மக்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் முக்கிய இடம் பிடித்து விட்டது. தொடர்ந்து தோனியின் பயணம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இருக்க வேண்டும் இனி வரும் இளைஞர்கள் எந்த விளையாட்டு ஆனாலும் அவரை முன்னுதாரணமாகக் கொண்டு விளையாட வேண்டும்.
கற்க வேண்டடிய பாடம்
நேற்று தோனிப்பிடித்த கேட்சில் கற்ற பாடம். இலக்கில் தெளிவு இருந்தால் இடையில் வரும் சரிவுகள் எல்லாம் சாதரணமானது என்பதை தோனி ஒருமுறை நிருபித்தார். நம்முடைய பல்வேறு வகுத்த இலக்கில் கவனம் தெளிவாக இருந்தால் வெற்றி உறுதி