மருத்துவம்

வில்வத்தின் அருமை தெரியுமா.? வாங்க தெரிஞ்சுக்கலாம்..

கோவில்களில் பிரதோஷ காலங்களில் இந்த இலைகளை வாங்கி வைத்து கொள்ளலாம். பூஜைக்கு மட்டும் இன்றி இந்த இலைகளை உட்கொள்வதால் பல நன்மைகள் உள்ளன. அது என்னென்ன என்பதை படித்து பிறருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

வில்வத்தின் பெயர்கள்

பொதுவாக வில்வ பலத்தை ஸ்ரீபலம் என்ற பெயரில் அழைப்பதுண்டு. மகா வில்வம் என்று சொல்லக்கூடிய மூவிலை,ஐந்திலை, கூட்டிலை, வில்வ இலையை அழைப்பார்கள். இந்த இலை பார்க்க நீள் வட்டமாக ஈட்டி போன்று நுனி பகுதி இருக்கும். இலை விளிம்பு இடை வெளிகளில் வெட்ட பட்டிருக்கும், இலை நுனி விரிந்திருக்கும், பிளவுற்று காணப்படும். சில நேரம் அரச இலை போன்று நீண்டிருக்கும்.

நுரையீரலை வலுப்படுத்தும்

சளி,கபம், இருமல்,ஆஸ்துமா போன்ற நுரையீரல் தொடர்பாக ஏற்படும் நோயை குணப்படுத்தும் வில்வ இலை.தினமும் இதன் இலைகளை உட்கொள்வதால் இதயம் பலப்படும் நுரையீரல் நோய் குணமாகும். இதயத்தை சுற்றியுள்ள தசைகளை பலப்படுத்தும். வயதிற்கு ஏற்ப இந்த இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

சிவப்பு அணுக்களை அதிகரித்து, ரத்தத்தை தூய்மை செய்யும். செரிமான கோளாறுகளை சரி செய்யும். வயிற்றில் தோன்றும் அஜீரண கோளாறை போக்கி, வாய்வு தொல்லையை விரட்டும் தன்மை கொண்டது வில்வம். இதன் தோல் பகுதியை அரைத்து தலையில் தேய்த்து வர வழுக்கையை போக்கும். இந்த இலையை சிறிது தண்ணிரில் ஊற வைத்து மையாக அரைத்து பூசி வரவும். வழுக்கையில் முடி வளரும் தன்மையை கொண்டது வில்வ பழத்தின் தோல். அரைத்த விழுதை வெண்ணெய் நீக்கிய மோருடனும் பருகலாம்.

பழத்தின் தோல்

வில்வ பழத்தின் தோலை தீயில் சுட்டு, வழுக்கை உள்ள இடத்தில தேய்த்து வர முடி வளர ஆரம்பிக்கும்.தொடர்ந்து 48 நாட்கள் வில்வம் உண்டு வர எப்பேர்ப்பட்ட கொடிய நோய்களும் குணமாகும் என்று மருத்துவ நூல்கள் தெரிவிக்கின்றன. நூறாண்டு பழமையான வில்வ மரத்தின் இலையானது சாப்பிட தோல் நோய்களும் குணமாகும்.

வில்வ இளைய தொடர்ந்து சாப்பிட நீரழிவு நோய் குணமாகும். வில்வ இலை காற்றை சுத்தம் செய்யும். இதன் பலத்தை
நல்லெண்ணெய்யில் ஊற வைத்து அரைத்து பூசி குளிக்க தோல் நோய் அரிப்பு எரிச்சலை போக்கும். இந்த இலையை எட்டு மணி நேரம் இரவில் ஊற வைத்து அதன் நீரை வடித்து குடிக்க தீராத வயிற்று வலியை போக்குமாம். உடல் நலம் பெறும். வாததோஷம் போகும்.

வில்வ மரம்

வில்வ வேரை 15 கிராம் எடுத்து 100 மிலி தண்ணிரில் கொதிக்க விட்டு பசும்பாலில் கலந்து தினமும் காலை குடித்து வர ஆண்மையை அதிகரிக்கும். வில்வ பழத்தை சிறிது சர்க்கரை, வெண்ணெயுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் புத்தி கூர்மை, தேஜஸும் கிடைக்கும். தோலுக்கு மினுமினுப்பை கொடுக்கும், மனா நோயாளிகள் இதை உண்டால் குணமாகும். மலச்சிக் கலை போக்கும். உடல் நரம்புகளை வலுப்படுத்தும்.

வில்வம் இலை 100 இதை சாறாக எடுத்து ஒரு பங்கு வரும் வரை சண்ட காய்ச்சி வற்றிய பின் தேன்கலந்து தினமும் இரு வேலை சாப்பிட்டு வர தொடர்ந்து தாக்கும் சுரத்தை குறைக்கும். ஏராளமான பயன்களை கொண்ட இந்த மரம் இமயம் அடிவாரம் முதல் குமாரி வரை எங்கும் வளரக்கூடியது. நாடெங்கும் காணப்படும் இந்த மரம் இலையுதிர் மரவகையை சேர்த்தது.

இலை, வேர், பலம், விதை அனைத்தும் மனிதர்களுக்கு மருத்துவ பயன்களை தரக்கூடிய வில்வ மரம் எல்லா இடங்களிலும் வளரும் தன்மை கொண்டுள்ளது.

மேலும் படிக்க

நம்புவோம்.. நிம்மதியாக வாழ்வோம்…!!

One thought on “வில்வத்தின் அருமை தெரியுமா.? வாங்க தெரிஞ்சுக்கலாம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *