Alya Manasa viral photo: தீபாவளிக்காக கருப்பு நிற உடையில் ஜொலிக்கும் ஆலியாவின் லேட்டஸ்ட் புகைப்படம்
விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆலியா மானசா. கிராமத்தில் உள்ள பெண் போல் சாதாரண தாவணி மற்றும் பட்டு பாவாடை உடுத்தி சீரியலில் அறிமுகமான இவர் தற்போது அனைத்து ஹீரோயினிகளுக்கும் டப் கொடுக்க முடியும் மிக பிரபலமாகிவிட்டார். அந்த சீரியலில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் மற்றும் ஆடையா மானசா ராஜா ராணி நாடகத்திற்கு பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். காதலை ரம்மியமாக வெளிப்படுத்தும் ரொமான்டிக் ஜோடிகளாக இணையதளத்தில் அசத்தி வருகின்றனர்.இவர்களுக்கு தற்பொழுது ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஆனாலும் இன்றும் இளமை மாறாமல் சஞ்சய் மற்றும் ஆகையால் தனித்தனியாக இரு வேறு நாடகங்களில் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடித்து வருகின்றனர். மேலும் ஆலியா மானசா ராஜா ராணி சீசன் 2 நாடகத்திலும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை தனக்கென சம்பாதித்து வைத்திருக்கிறார்.ஆலியா மானசாவின் நடிப்பே ஒரு தனி ஸ்டைல் ஆக இருக்கும்..மேலும் இவரின் நடனத்திற்காகவே பல ரசிகர்கள் உள்ளனர்.
தற்பொழுது ஆலியா மானசா சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.இந்த சீரியலும் டிஆர்பியில் போட்டி போட்டுக் கொண்டு தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டு உள்ளது. கணவன் மனைவியாக சின்னத்திரையில் கலக்கி வரும் ஜோடிகளாக உள்ளனர்.

இந்நிலையில் ஆலியா மானசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உடையில் ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தீபாவளி பண்டிகை ஒரு. வாரத்தில் வரப்போகும் நிலையில் தனது தீபாவளி பர்ச்சேஸ் இப்பொழுது முதலே தொடங்கி விட்டதாக கூறி உள்ளார்.ரசிகர்களும் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குஸ்களை குவித்து வருகின்றனர்.