இத படிங்க எப்பவும் சுறுசுறுப்பா இருங்க..!!
நமக்கு ஏற்படும் மன அழுத்தத்தை எப்படி மீள்வது? மன அழுத்த மேலாண்மையும், அதன் மேல் மனத்தணிவும். உங்கள் புன்னகை பூத்தபடி இருக்கட்டும். ஒரு விளையாட்டை அனுபவித்து விளையாடு. அது உடலை களைபாக்கி உள்ளத்தை சுறுசுறுப்பாக்க உதவும். தினமும் இரவில் உறங்கப் போகும் முன், உப்பை கலந்து வெந்நீரில் பாதங்களை முழுக்க வைப்பதால், நரம்புகள் அமைதி அடைந்து, மன அழுத்தத்தை விரட்டும். நல்ல இரவு தூக்கத்துக்கு வழிவகுத்துக் கொடுக்கும். சில எளிய உடல் இப்பயிற்சி செய்வதால் உடலும் மனதும் புத்துணர்ச்சி பெறும்.
மன அழுத்தத்தை எப்படி மீள்வது?
நல்ல நண்பர்களின் சகவாசம் உங்களுக்கு இளமையான மனதுடன் வைத்திருக்க உதவும். தயிரும், உருளைக் கிழங்கும் உண்பதால் மனதிற்கு உற்சாகமூட்டி தெம்பு தரும். நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். சிரிப்பு ஒரு நல்ல மருந்து என்று சரியாகவே சொல்லப்படுகிறது. உறக்கம் மிக முக்கியமானது. உறக்கம் மன அழுத்தத்தை குறைத்து, மன சமநிலையை இயற்கையாகவே ஏற்படுத்தும்.
உயர்வான எண்ணங்கள்
ஒவ்வொரு நாள் காலையிலும் எலுமிச்சம்பழத்தை நீங்களே பிழியவும். எலுமிச்சை சாறு கலந்த தேநீர் தினமும் குடித்து வருவதால், இதனால் மன அழுத்தம் படபடப்பு குறைக்க உதவும். ஆழ்ந்த மெதுவான மூச்சு முழு உடலையும் தளர்த்தி அமைதியான நிலையை ஏற்படுத்தும். எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்து உயர்வான எண்ணங்களை நினைப்பது நலம். அடுத்தவர்களின் வெற்றிக்காக மகிழ பழகிக் கொள்ளுங்கள்.
இசையை ரசிக்க கற்றுக் கொள்வதால் நல்ல மனநிலையை ஏற்படுத்த அது உதவும். நிம்மதியும் தேவைப்படும் பொழுது தொலைக்காட்சி மற்றும் வானொலி மற்றும் தொலை பேசியை உபயோகப்படுத்தாமல் இருப்பது நல்லது. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இறை வணக்கத்தை மேற்கொள்ளுங்கள். அது வாழ்க்கையை அர்த்தத்துடன் நம்மை நாமே அறிந்து கொள்ளவும் உதவுகிறது நாட்குறிப்பு எழுதுவது மன அழுத்தத்தை குறைத்து கொள்ளும்.
சில நேரங்களில் கூடுதல் பணம் சம்பாதிக்கும் செயல்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வதால் அது உங்களை உற்சாகத்தை அதிகப்படுத்தக் கூடும். எனவே அதற்கு முயலுங்கள். மன அழுத்தம் இல்லாமல் இருக்க வாழ்க்கை முறையில் ஒரு மாற்றத்தை புகுத்தி பாருங்கள்.
படுத்தவுடன் தூக்கம் வரலைன்னா மல்லாந்து படுத்தபடி கால்களை நீட்டி 15 நிமிடங்கள் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். பயிற்சியில் மட்டும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்க. பிறகு 15 நிமிடங்கள் பக்கவாட்டில் திரும்பி படுங்க வேறு நினைவுகளை தவிர்த்துவிட்டு இதை செய்வதால் தூக்கம் உங்களை தழுவும்.
நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். சிரிப்பு ஒரு நல்ல மருந்து என்பது சரியாகவே சொல்லப் பட்டிருக்கிறது. மிக முக்கியமானது உறக்கம் மன அழுத்தத்தை குறைத்து, மன சமநிலையை இயற்கையாகவே ஏற்படுத்தும். வேலையையும், ஓய்வையும் சமன்படுத்தி உங்கள் பணி மிக உயர்ந்த அளவு பொறுப்பு உள்ளதாக இருக்குமாயின் எல்லோருடனும் மனம் விட்டுப் பழகுவது பயனுள்ளதாக இருக்கும்.