அழகு குறிப்புகள்

இளமையை காக்கும் கன்னியவள் யாருன்னு தெரியுங்களா அவதான் நம் கற்றாழையவள்..!

தற்போது அழகுக்கலையில் வெகுவாக பயன்படும் கற்றாலையில் எவ்வளவு மருத்துவ பயன்கள் உள்ளது என்று நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதன் மருத்துவ குணங்களை பற்றியும் அதன் வகைகளைப் பற்றியும், அதனை உபயோகிக்கும் முறையை பற்றியும் நாம் இங்கு காண்போம்.


பல வகையான கற்றாழைகள் உள்ளன, ஆனால் அவை அனைத்தையுமே நம்மால் பயன்படுத்த முடியாது, குறிப்பிட்ட வகை மட்டுமே மருத்துவ குணம் உடையவை. அவற்றைப் பற்றி காண்போம்.

கற்றாலையின் வகைகள்:

சோற்றுக் கற்றாழைசிறுக்கற்றாழைபெரும் கற்றாழைசெங்கற்றாழைபேய்க்கற்றாழைகருங்கற்றாழைரெயில் கற்றாழை
இவற்றில் மருத்துவ குணம் உள்ளவை 

சோற்றுக்கற்றாழை, சிறு மற்றும் செங்கற்றாழை. இவற்றைப்பற்றிக் காண்போம்.
சோற்றுக் கற்றாழை:
சோற்றுக்கற்றாழை மிகவும் மருத்துவ குணம் மிக்க மூலீகையாகும். இதனை பல வகைகளில் பயன்படுத்தி நன்மை பெறலாம். இதில் உள்ள வைட்டமின், அமினோ அமிலங்கள், மினரல் என பல வகையான சத்துக்கள் உடழுக்கு நன்மை பயக்கின்றன. தலை முடி உதிர்தல், முகப்பொழிவு, அஜிரணக் கோளாரறு, சீரான எடையை பராமரிக்க, மலச்சிக்கல், நச்சு நீக்கி என பல வகைகளிள் பயன்படுகிறது.

தினமும் சிறிதளவு கற்றாலைச் சாறு பருகுவதால் உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேரும்,  மேலும் சீரான ஜிரணம், குடலை சுத்தமாதல், சீரான சர்க்கரை அளவு பராமறித்தல் என பல வகைகளில் உதவுகிறது. இதனுடன் சீரகம் சேர்த்து காலை வெறும் வயிற்றில் விழுங்கினால் வயிற்றுப் புண் நீங்கும்.  தீக்காயங்களுக்கு உடனடி மருந்தாகவும் இது பயன்படுகிறது.

இதன் சதைப் பகுதியை எடுத்து அதனை நன்கு அறைத்து தலைக்கு தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் தலைமுடி வழு பெரும் மேலும் கருமையும் பெரும். இந்த சதைப்பகுதியுடன் சிரிதளவு ரோஸ் வாட்டர் (அ) எழுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவினால் முகம் பொழிவு பெரும்.

முற்றிய கற்றாலையினைப் பிளந்து வெந்தயம் வைத்து இரவு தூங்கும் போது கட்டி வைத்தால் காலையில் முளை கட்டிவிடும் அதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்று வலி நீங்கும். மேலும் மோருடன் கலந்து குடித்தால் முகப்பரு, வெய்யிலினால் உண்டான கருமை நீங்கும் மற்றும் உடல் சூடு குறையும்.

சோற்று கற்றாழையின்   சோற்றுப்பகுதியினை கூழாக்கி மோரில் கலந்து மோரில் கலந்து சாப்பிட பெண்களுக்கு ஏற்படும்  வெள்ளைப்படுதல் குணமாகும்.

 முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அகற்ற கற்றாழை சிறந்த நிவாரணி ஆகும்.ஏற்கனவே அத்துடன்   கற்றாழை உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் மிகச்சிறந்த  அழகு சாதனமாக பயன்படுத்துகின்றனர். உடல், முகம், தலை, கண் போன்ற வெளிப்புற பளப்பளப்பு கற்றாழை மிகவும் உதவிகரமாக இருக்கும். 

தலைமுடி வளர சோற்றுகற்றாழை மேல் பகுதியின் நடுவில் கொஞ்சமாக  சீவி நடுவில்  வெந்தயம் வைத்து இரண்டு நாட்கள் அதனை தோலால் மூடி வைத்து மூன்றாம் நாள் பார்த்தால் வெந்தயம் முளை கட்டியிருக்கும் அதனை தேங்காய் எண்ணெயில்  இட்டு தடவி வந்தால் தலை முடியின் நரை கருப்பாகும் அத்துடன் வேர்கால்கள் வலுவாகும்.

சிறுக்கற்றாழை:

இதுவும் சோற்றுக் கற்றாலையும் ஒன்றே. இதுவும் அழகு சாதனம் மற்றும் மருத்துவத்தில் பயன்படுகிறது. சிறு கற்றாழையை  துண்டுகளாக வெட்டி  7 முறைக்கு மேல் கழுவி மருந்தாகப் பயன்படுத்தலாம்.

சோற்றுக்காற்றாழையை மூல நோய் தீர சதையை நன்றாக கழுவி முருங்கை பூ வைத்து அம்மியில் வைத்து சாப்பிட்டால் மூலம் குறையும் காலையில் மட்டும் சாப்பிட வேண்டும்.

சோற்றுக் கற்றாழையின் சதையை கண் இமைகளில வைத்து வந்தால் கண் வெப்பம் குறைதலுடன் எரிச்சல் மற்றும் கருவளையம் வராது. 
இந்த காலத்தில்  கற்றாழை சிறந்த  வருகின்றது. நகர மக்கள் எளிதாக வீட்டு தொட்டியில் கற்றாழையை  வளர்க்கின்றனர்.

செங்கற்றாழை:

செங்கற்றாழையை அன்றய சித்தர்கள் அவர்களுடய மருத்துவக் குறிப்பில் பலவாறு குறிப்பிட்டுள்ளனர். இதனைப் பயன் படுத்துவதால் உடலில் கஸ்தூரி வாசம் வீசும், வியர்வை வெளியேறாது, தலை முடிக்கு உகந்தது, நரை மாறும், சோம்பல், கொட்டாவி வராது மேலும் பார்வைத்திறன் அதிகரிக்கும்.

செங்கற்றாழை காயகற்பம் முறைக்கு பின்வருமாரு பயன்படுத்தாலம். அதன் தோலை நீக்கி ஏழு முறை அதனை நன்கு கழுவி அதனுடன் சுக்கு, மிளகு, திப்பிலி கலந்த தூளில் பிரட்டி மென்று முழுங்கவும். இவ்வாறு 48 நாட்கள் காலை மாலை என இரு வேளைகள்  உட்கொள்ள வேண்டும். அடுத்தடுத்து கற்றாழையின் பயன்களை அறிவோம்!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *