சமையல் குறிப்புவாழ்க்கை முறை

பாதாம் சாக்லேட்

வீட்டில் எப்போதும் ஒரே மாதிரியான இனிப்பு பதார்த்தங்களை செய்து போர் அடித்தால் புதிதாக ஏதாவது ட்ரை செய்தால் நல்லா இருக்குமே என்று யோசிக்க தோன்றும். அப்படி புதிதாக ட்ரை செய்து கொடுக்கும் போது அதன் சுவை நன்றாக இருந்தால் பாராட்டுகள் குவியும்.

புதிதாக ஏதாவது ட்ரை செய்து கொடுக்கும் போது சாப்பிட்ட பிறகு அதில் சுவை நன்றாக இருந்தால் கிடைக்கும் சந்தோஷமே தனிதான். மிக எளிய முறையில் வீட்டில் தயாரிக்கும் இனிப்பு வகையில் பாதாம் சாக்லெட் செய்து பார்க்கலாம். 20 நிமிடத்தில் பிரிப்பர் செய்தால், 360 கலோரி கொண்ட இந்த சாக்லேட் 35 நிமிடங்களில் தயாரித்து விடலாம்.

  • டார்ச் சாக்லேட் சாப்பிட்டு அழுத்தவர்களுக்கு இது மிகவும் பிடிக்கும்.
  • உங்கள் அன்பானவர்களுக்கு கொடுத்து அவர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கலாம்.
  • மூன்று நபர்களுக்கு கொடுத்திருக்கிற அளவில் செய்தால் சாக்லேட்டை மிக எளிதாக தயாரித்து விடலாம்.

தேவையான பொருட்கள்

வறுத்த பாதாம் அரை கப்

சாக்லேட் ஒரு கப்

செய்முறை விளக்கம்

அரை வினாடி சாக்லேட்டை உருக வைத்து எடுத்து நன்றாக கிளறி விட்டு மீண்டும் அரை வினாடிகள் உருக வைக்க வேண்டும். சாக்லேட்டை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும். வறுத்து வைத்த பாதாம் தூளை சேர்த்து மீண்டும் நன்றாக கிளறி விடவும்.

இரண்டும் ஒன்றுடன் ஒன்று நன்றாக கலந்து விடவும். பிறகு சாக்லேட் மோல்டு ட்ரேயில் இக்கலவையை ஊற்றி பத்து நிமிடங்கள் ப்ரீசரில் வைத்து எடுத்தால் பாதாம் சாக்லெட் தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *