தேர்வு இல்லாமல் இந்த ஆண்டு பாஸ்!
மாணவப் பருவத்தில் பள்ளி கல்லுரிகள் தொடர்ந்து விடுமுறை அளிக்க வேண்டும் என வேண்டுவர் அது நடக்காது. ஆனால் இந்த கோவித்-19 மாணவர்களுக்கு விடுமுறை கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.
அடராசக்கை ! அடராசக்கை, இந்த கொரானா வந்தாலும் வந்துச்சு வருஷம் படிக்காம பாஸ் பண்ற லக்கி ஸ்டூடன்ஸ் நாமாகத்தான் இருப்போம் என்கின்றனர் மாணவர்கள். கோவித் -19 தொடங்கியதிலிருந்து இந்தியாவில் பள்ளி கல்லூரிகள் முறையாக செயல்படாமல் இருக்கின்றது. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்ததும் 10-ஆம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 15 இதோ அதோ என இழுத்துக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவை நாள் பள்ளி கல்லூரி தேர்வுகள் அனைத்தும் முடங்கியுள்ளது கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வு இன்னும் நடைபெறவில்லை. கல்லூரிகள் மீண்டும் எப்போது தொடங்கும் என மாணவர்கள் வருந்துகின்றனர். இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் பாஸ் போட்டு மாணவர்கள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற்றவர்களாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மூன்றாம் வருடம் படிக்கும் கல்லூரி மாணவர்கள் தங்களுடைய தேர்ச்சி சதவீத அடிப்படையில் டிகிரி பெற்றுக்கொள்ள மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. இந்த முடிவைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள கல்லூரிகள் தங்களது தேர்வு தொடர்பான அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கோவித்-19 தாக்கம் தொடர்ந்து இருப்பின் நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் இந்த ஆண்டு செமஸ்டர் தேர்வு ஒத்திவைத்து அறிவிக்கலாம் என்று கருத்தும் நிலவுகின்றது. இந்த தாக்கத்தினால் நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள் அனைத்தும் முடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
படிப்பு முடித்து வெளியே வந்து பணிக்கு செல்ல ஆயத்தமாக இருந்த கல்லுரி இறுதி ஆண்டு மாணவர்களின் நிலை வேதனைதான். அவர்களின் எதிர்காலம் பற்றிய பயம் என்பது தற்போது அதிகரித்து இருக்கும். ஆனால் இந்த சூழலில் உலகமே முடங்கிக் கிடக்கும் இந்த தருணத்தில் மாணவர்கள் அஞ்ச அவசியமில்லை நிச்சயம் அடுத்தடுத்த ஆண்டுகள் மாணவர்களுக்கான வாய்ப்புகள் என்பது அதிகரித்திருக்கும். ஆகையால் ஊரடங்கால் மாணவர்கள் இந்த சவாலான சூழலை சமாளித்து வெளிவர வேண்டும். என்னத்தான் விடுமுறையாக இருந்தாலும் வீட்டிலேயே இருப்பது மாணவர்களை மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது மாணவர்கள் அதனைப் போக்க வேண்டும்.