தீராத நோய் தீர்க்கும் தைப்பூச வழிபாடு
தை மாத பௌர்ணமி அன்று தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்கள் கொண்டாடப்படும் முக்கிய விழா. பௌர்ணமி அன்று பூச நட்சத்திரம் கூடிய நாள் தைப்பூசம். சில நேரங்களில் பவுர்ணமியும், பூசமும் 1,2 நாட்கள் முன்பின் வரும். இந்த வருடம் தை 15 ஆம் தேதி வருகிறது. ஆங்கில தேதிப்படி 28 வியாழக்கிழமை அன்று தைப்பூசம் வருகிறது. பூச நட்சத்திரமும், பவுர்ணமியும் சேர்ந்து ஒரே நாளில் வருகிறது.
முருகன் கோவிலில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துவார்கள். இன்றைய தினம் திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் போன்ற பாடல்களைப் பாராயணம் செய்ய வேண்டும். அறுபடை வீட்டில் பழனி, திருச்செந்தூர் கோவில்களில் சிறப்பு விசேஷமாக தைப்பூச பூஜைகள் நடைபெறும். நோய்கள் ஏற்படாமல் இருக்க, ஏதாவது நோய்கள் இருந்தால் அதைப் போக்கும் பட்சத்தில் முருகனிடம் வேண்டி வேண்டுதல் நிறைவேறினால் அடுத்த தைப்பூசத்தில் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
மேலும் படிக்க : சுபிட்சமாக இருக்க கனகதாரா ஸ்தோத்திரம்!
தீராத நோயால் அவதிப்படுபவர்கள் காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டு முருகனுக்கு விரதமிருந்து தைப்பூசத்தன்று நேர்த்தியை செலுத்துவார்கள். உடல் ஆரோக்கியம் பெற்று பல பக்தர்கள் பக்தர்களின் உணர்வுபூர்வமான வேண்டுதல்கள் இவை. பலரும் உணர்வுபூர்வமாக அனுபவித்துள்ளனர்.
மேலும் படிக்க : மணி பிளான்ட்டின் தன்மை யாரும் அறியா உண்மைகள்