எல்லாம் ஒரு பாதுகாப்புக்காக தான் ஜப்பானியர்களின் மூளையோ மூளை
பல மாதங்கள் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த உணவகங்கள், கடைகள் எல்லாம் தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்புகின்றன. ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளன. தனிமனித இடைவெளி வேண்டும் என்பதால் பல உணவகங்கள் இருக்கைகளை குறைத்துள்ளன.
இந்நிலையில் தனிமனித இடைவெளிகள் யோசித்து ஜப்பான் மதுபான விடுதி ஒன்று பெரிய கண்ணாடி டம்ளர்களை தொங்க விட்டுள்ளன. பெரிய அளவிலான கண்ணாடி டம்ளர்களை தலைகீழாக தொங்கினால் எப்படி இருக்கும். அப்படிப்பட்ட வசதியை ஜப்பான் மதுபான விடுதி ஏற்படுத்தியுள்ளன.
இங்கு வருபவர்கள் அந்த கண்ணாடி டம்பளருக்கள் இருப்பார்கள். ஒரு வகை தடுப்பு போல செயல்படும் என பார் நிர்வாகம் தெரிவித்துள்ளன. மேலும் இந்த புதிய முறை வழக்கமானதாக இல்லை என்றாலும் பாதுகாப்பான ஒன்று எனவும் இதற்கு வரவேற்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு மேலாக கொரோனா என்ற வார்த்தையுடனேயே உலகநாடுகள் நாட்களை கடத்திக் கொண்டு இருக்கின்றன. சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா இன்று வரை உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டது மட்டுமில்லாமல் உலக நாடுகளின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என அனைத்து துறைகளையும் பாதித்துள்ளன.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியிலும் உலக நாடுகள் தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில் ஜப்பான் மதுபான விடுதியில் எதிரெதிரே இருந்தாலும் பாதுகாப்பு தான் என்ற பலே ஐடியாவை அறிமுகப்படுத்தியுள்ளனர். தனிமனித இடைவெளி காக யோசித்த ஜப்பான் மதுபான விடுதி ஒன்று பெரிய கண்ணாடி டம்ளர்களை தொங்க விட்டுள்ளனர். புதுவித ஐடியாவாக இருந்தாலும் இதை வரவேற்றுள்ளனர் அந்நாட்டு மக்கள்.