பிறந்தநாள் கொண்டாடும் அலைகள் ஓய்வதில்லை நாயகன்
நேற்று மகனுக்கு இன்று தந்தைக்கா! தொடர்ந்து பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். நவரச நாயகன் கார்த்திக்கு இன்று பிறந்தநாள்.

கார்த்திக்
மறைந்த நடிகர் முத்துராமனின் மகன் முரளி கார்த்திகேயன் முத்துராமன் (எ) கார்த்திக் 13 செப்டம்பர் 1960ல் மதராஸில் பிறந்துள்ளார். உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜாவால் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டவர் கார்த்திக். நீங்கள் நினைத்தது சரிதான் அலைகள் ஓய்வதில்லை என்பதே அவர் முதல் படம். இந்தப் படத்தின் மூலமாக சிறந்த அறிமுக நாயகன் விருதை தட்டி பறித்தார்.

முன்னணி இயக்குனர்களான மணி ரத்னம், கே. பாலச்சந்தர், பாலுமகேந்திரா, பாரதிராஜா, விசு, சுந்தர்ராஜன், வாசு, விக்ரமன், அகத்தியன், சுந்தர் சி, கே. எஸ். ரவிகுமார், கே.வி. ஆனந்த், ப்ரியதர்ஷன், உதயகுமார் என பட்டியல் பெரிதாகிக் கொண்டே போகிறது. தமிழ் திரையுலகிலேயே பிரதானமாக நடித்து வந்தவர் தெலுங்கு திரையுலகில் சில படங்களிலும் நடித்தார்.
ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா
1981ல் அறிமுகமானார் கதாநாயகராக, கவுண்டமணியுடன் இணைந்து நகைச்சுவை நாயகனாக, வில்லனாக என பல கதாபாத்திரங்களில் பட்டையைக் கிளப்பி வந்தார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் என்பது போல் 2006 சில பழக்க வழக்க பிரச்சனையால் திரையுலகை விட்டு தள்ளி இருந்தவர் 2010ல் மாஸாக திரை உலகுக்கு திரும்பினார்.

அவர் வயதிற்கு தகுந்தாற்போல் துணை கதாபாத்திரங்களை ஏற்றுக்கொண்டு சூப்பரான திரைப் பயணத்தை அமைத்துக் கொண்டார். மாஞ்சா வேலுவில் அண்ணன் கதாபாத்திரம், அனேகன் படத்தில் வில்லன் கதாபாத்திரம், தானா சேர்ந்த கூட்டம் படத்தில் போலீஸ் அதிகாரி மற்றும் தன் மகன் கௌதம் கார்த்திக்குடன் தந்தை கதாபாத்திரத்தில் மிஸ்டர் சந்திரமௌலி படம் என தற்போது வரை மார்க்கெட் குறையாமல் சூப்பரான நடிகராகத் திகழ்கிறார் கார்த்திக்.

மேலும் வெற்றி பெற வாழ்த்துக்களோடு அறுபதாவது பிறந்த நாளைக் கொண்டாடும் கார்த்திக்கு மக்களின் சார்பாக பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை சிலேட்குச்சி தெரிவிக்கிறது.