சினிமாசெய்திகள்தமிழகம்

கலக்கல் பிஜிஎம்மில் துணிவு

அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான தருணங்களை உண்டாக்க துணிவு படம் வேலைகள் வேக வேகமாக நடந்து வருகின்றன. அஜித் மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்துள்ள துணிவு படமானது பெரிய நடிகர்களின் டப்பிங் முடிக்கப்பட்டு உள்ளது.

சக்கைபோடு போடவுள்ள துணிவு

துணிவு படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஜிப்ரான் இசையில் தலையின் துணிச்சல் பொங்கி படம் அதிக வரவேற்பை பெற்று இருக்கின்றது. மேலும் துணிவு படம் பிஜிஎம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன.

பொங்கல் ஸ்பெசல்
துணிவு படமானது இந்த வருடம் பொங்கல் ஸ்பெஷலாக இருக்கும்.
துணிவு படத்திற்கு தியேட்டர் உரிமையை ரெட் ஜெயின் நிறுவனம் வாங்கியுள்ளது தமிழ்நாடு முழுவதும் துணிவு படம் சக்கை போடு போடும் என்று அஜித் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

மேலும் படிக்க : அழகே பிரம்மனிடம் மனு…. தேவதையை கண்டேன்

பக்கபலமாகும் அஜித் ரசிகர்கள்

நல்ல படம் எப்போதும் ஓடும் என்ற எண்ணத்துடன் அஜித் செயல்படுகின்றார். இந்த முறை அஜித் துணிவு படம் பிரமோஷன் நிகழ்ச்சிக்கு வர மாட்டார் என தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் அஜித் வரவில்லை என்றாலும் அஜித் ரசிகர்கள் வெறித்தனமான ரசிகத்தனத்துடன் செயல்படுகின்றனர். துணிவு பட ஸ்டில்ஸ் அனைத்தும் பிரபலப்படுத்தும் நோக்கத்துடன் அஜித் ரசிகர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

வாழு வாழவிடு பாலிசி
நடிகர் அஜித்குமார் வெளியிட்டுள்ள செய்திகள் ரசிகர்கள் நேர்மறையான எண்ணங்களுடன் இருக்க வேண்டும் எண்ணம் போல் வாழ்க்கை என்பதை வலியுறுத்தி கூறியுள்ளார். நல்லதை மட்டுமே நம்பு நல்லதை மட்டுமே நினைக்கின்ற போக்கில் தனது பதிவினை வெளியிட்டு இருக்கின்றார். மேலும் ஜிப்ரான் இசை துணிவு படத்திற்கு பெரும் பலமாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது அஜித் பேசும் தத்துவங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகியது குறிப்பிடத்தக்கதாகும்.

அஜித்க்கு வெற்றி தருமா
துணிவு படம் மட்டும் மூன்று பாடல்களை கொண்டுள்ளது காசேதான் கடவுளடா ராப் சாங்காக வந்துள்ளதாக சொல்லப்பட்டிருக்கின்றது தகவல்கள் கிடைக்கின்றன துணிவு படம் ஆக்சன் படமாக வெளிவர உள்ளது மங்காத்தா பெரும் வெற்றியை அஜித்திற்கு கொடுத்தது துணிவும் அவ்வாறே இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்

மேலும் படிக்க : பெரியண்ணா படம் பாடல் வரிகள் ஏய் தன்னானே தாமரைப்பூ…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *