அஜித் குமாரின் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள்
வலிமை படம் கதாநாயகன் அஜித் குமார் பன்முக வித்தகராக திகழ்வது தற்போது உலகம் அறிந்தது. கொரோனா பாதிப்பால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ஊரடங்கும் முடிவுக்காக காத்திருக்கும் வேளையில் அஜித் குமார் என்ன செய்கிறார் என்று அனைவரின் ஆவலையும் தூண்டுகிறது.
திரை உலகில் அனைவரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை அப்டேட்டாக வைத்துள்ளனர். கதாநாயகனாக இருந்தால் உடலையும் ஜிம்மில் செய்யக்கூடிய கடினமான உடற்பயிற்சிகளை செய்து வளர்ப்பதும் கதாநாயகியாக இருந்தால் வொர்க் அவுட் செய்து டயட்டில் இருந்து உடலை குறைப்பதுமாக காலத்தைக் கழிக்கின்றனர்.
தக்ஷா குழு
திரையுலகின் தல அஜித் குமார் சற்று வித்தியாசமாக செயல்பட்டுள்ளார். சென்னை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அமைத்துள்ள வான்வெளி ஆராய்ச்சி மையமான தக்ஷா குழுவின் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார் அஜித் குமார்.
ட்ரோன்
தக்ஷா குழு சமீபத்தில் தமிழகத்தில் பல இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு வேலையை ட்ரோன் மூலம் செய்து வருகிறது. இந்த செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. மக்கள் தந்த பாராட்டும் வரவேற்பும் இவர்களை மேலும் திறம்பட செய்ய வைத்துள்ளது.
ஹெலிகேம்
அஜித்குமாரின் தலைமையிலான தக்ஷா குழு தற்போது புதுவிதமான யோசனையை அரசாங்கத்தின் முன் நிறுத்தி வைத்துள்ளது. கொரோனா பணியை கண்காணிக்க மற்றும் மேற்பார்வையிட ஹெலிகேம் எனும் பறக்கும் புகைப்பட கருவியை உருவாக்கியுள்ளனர்.
கொரோனா தொற்று மனித இடைவெளி கடைபிடித்தால் பரவாது என்ற வாக்கியத்திற்கு இணங்க அரசாங்கம் மக்களை பார்வையிட நேரில் வராமல் ஹெலிகேம் செயல்பாட்டால் பரவலைத் தடுக்கலாம். தூய்மை பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் சரியான முறையில் நடைபெறுகிறது என்பதையும் ஹெலிகேம் மூலம் துல்லியமாக கவனிக்கலாம்.
செம அருமையான யோசனை தக்ஷா குழுவுக்கும் அஜித் குமாருக்கு மனதார பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தெரிவிக்கலாம்.