சினிமாசெய்திகள்

குஷியில் அஜித் ரசிகர்கள்:- AK61 ஷூட்டிங்

அஜித்தின் நேர்கொண்ட பார்வை தொடங்கி வலிமை என நீண்ட போனி கபூர், ஹெச்.வினோத் கூட்டணி தற்போது அவரது 61வது படத்திலும் இணைந்திருக்கிறது. இது தொடர்பாக தயாரிப்பாளர் போனி கபூர் முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா காரணமாக வலிமை படம் தொடர்பாக எந்தவித அப்டேட்டும் வராததால், ஆத்திரமான ரசிகர்கள், ஐபிஎல் தொடங்கி, அரசியல்வாதிகள் உள்பட பல பிரபலங்களிடம் வலிமை அப்டேட் கேட்டு வந்தனர். இதனிடையே நான் வெற்றி பெற்றால் கண்டிப்பாக வலிமை அப்டேட் வாங்கி தருவேன் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

இதனையடுத்து தொடர்சியாக வலிமை பட அப்டேட்டுகள் வந்து கொண்டிருந்தன. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பிப்ரவரி 24ம் தேதி நடிகர் அஜித்தின் வலிமை படத்தின் வெளியீட்டுக்காக படக்குழு தயாராகி வரும் வேளையில், தற்போது அஜித்தின் 61வது படத்தின் முன்னோட்ட வேலைகளும் படு மும்முரமாக நடைபெற்று வருகிறது என சினி வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

வலிமை ரிலீஸான கையோடு அஜித்தின் 61வது படத்துக்கான வேலைகளை படக்குழு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. இப்படி இருக்கையில், புது தகவலாக மார்ச் 9ம் தேதி AK61 ஷூட்டிங் தொடங்கப்படும் எனவும், ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : ஜிகு..ஜிகு உடையில் பிரபல நடிகை..!

இதனிடையே சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு புதுவித கெட்டப்புடன் வந்த அஜித்தை கண்ட ரசிகர்கள் சிலர் அவருடன் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.

அதில், நடிகர் அஜித்குமார் நீண்ட தாடியுடன், கருப்பு கோட், காதில் கம்மல், கோல்டன் ஃப்ரேம் கண்ணாடி என ஸ்டைலாக இருந்துள்ளார். இந்த நிலையில், வைரலான புகைப்படத்தில் இருந்த அஜித்தின் லுக்தான் அவரது 61வது படத்துக்கான கெட்டப் என்பதை தயாரிப்பாளர் போனி கபூரே ட்விட்டரில் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்.

மேலும் படிக்க : நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்க…. சுந்தர பாண்டியன் படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *