கடலுக்கு அடியில் அசத்தலான பேனர்..
ஒருவரை நமக்கு பிடித்து விட்டால் அவருக்காக எந்த எல்லைக்கும் செல்வம் என்பதை நிரூபித்து காட்டியுள்ளனர் அஜித் ரசிகர்கள். அஜித் வாலி காதல் மன்னன் போன்ற படங்களின் மூலம் பேமஸ் ஆனவர் . இவர் நடிப்பு என்றுமே ஒரு வித்தியாசமான கதாபாத்திரமாக இருக்கும் மேலும் ஒரு எதார்த்தமான மனிதராக நின்ற வாழ்விலும் இருப்பவர் இவர். கடின உழைப்பிற்கு பரிசு கண்டிப்பாக உன்னை வந்து சேரும் என்பதற்கு அஜித் ஒரு எடுத்துக்காட்டாக தெரிந்திருப்பவர் இவர். ஆரம்பத்திலேயே ஒன்றும் சினிமா வாழ்க்கையில் கொடி கட்டி பறக்கவில்லை அவ்வளவாக பேமஸ் ஆகவில்லை ஆனால் இவரின் விடாமுயற்சியால் படிப்படியாக முன்னேறி தல என்ற இடத்தை பிடித்து ரசிகர்கள் மனதில் 30 ஆண்டுகளாக அசையாமல் நிற்கிறார். 30 ஆண்டுகளாக சினிமா வாழ்வில் உள்ள இவர் என்றும் இளமை மாறாமல் தனது நிஜ தோற்றத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இன்றும் கெத்தாக சினிமா துறையில் கலக்கி வருகிறார். நடிப்பிற்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

அஜித்தின் நடிப்பை போலவே அவரது குணமும் சூப்பர் ஹிட் தான். இவர் மற்றவர்களுக்கு உதவுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவர் இவரால் முடிந்தவரை திறமை காயப்படுத்தாமல் தன்னால் முடிந்ததை கொடுக்கும் இடம் கொண்டவர். இதனாலேயே இவர் நடிப்புக்காகவும் கேரக்டருக்காகவும் உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளம் உள்ளனர்.நடிகர்களின் ரசிகர்கள் அவர்களின் உச்சகட்ட அன்பை ஏதாவது ஒரு முறையில் வெளிப்படுத்தி மகிழ்ச்சி அடைவர். படம் ரிலீஸ் ஆனதும் முதல் நாளில் தியேட்டர் முன்பு பெரிய கட்டவுட் வைத்து அதற்கு பால் அபிஷேகம் செய்வது ,தங்களுக்கு பிடித்தமான நடிகர்கள் பெயரை பச்சை குத்துதல் அல்லது முகத்தை வரைவது , பிள்ளைகளுக்கு அவர்கள் பெயரை வைப்பது எங்கு சென்றாலும் அவர்களைப் பற்றிய பேசுவது என்று ஒவ்வொரு ரசிகர்களும் ஒவ்வொரு தங்களது அன்பை வெளிப்படுத்துவர். இந்நிலையில் இதனால் வரை செய்யாத ஒன்றாகவும் புதுவிதமான முயற்சியாகவும் அஜித்தின் 30 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் ஒரு வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ளனர். இது ஒரு உச்சகட்ட அன்பின் வெளிப்பாடு என்றே கூறலாம்.
மேலும் படிக்க ; குஷியில் அஜித் ரசிகர்கள்:- AK61 ஷூட்டிங்

தரையில கட்அவுட் வச்சதெல்லாம் பழைய ஸ்டைல் அப்படின்னு முடிவு பண்ணிட்டாங்க போல.. ரசிகர்கள் scuba diving மூலமாக கடலுக்குள் சென்று நூறு அடி ஆழத்தில் பேனர் வைத்து அசத்தியுள்ளனர். இந்த செய்தி சமூக வலைதளங்களில் மிக வைரலாக பேசப்பட்டு வருகிறது அனைவராலும் பகிரப்பட்டும் வருகிறது. அஜித்தின் ரசிகர்கள் இதை பார்த்து மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
மேலும் படிக்க ; மனசு ரெம்ப வலிக்குது:- கதறும் அஜித் ரசிகர்கள்…!