விவசாய பயிர்களை காக்க இயற்கை பூச்சிக்கொல்லி
விவசாயம் நாட்டின் முதுகெலும்பாக தேசத்தின் தாரகமந்திரம் என்றால் அது விவசாயம் தான் விவசாயத்தில் இந்தியா பல புரட்சிகளை செய்து தன்னிறைவுடன் திகழ்ந்தது என்றால் அது மிகையாகாது. இந்தியாவின் முகவரி விவசாயம் இந்தியா இயற்கை விவசாயத்தில் ஒரு காலத்தில் செழித்து வளர்ந்தது. ஆனால் தற்போது விவசாயத்தில் பல்வேறு புதுமைகள் ஹைபிரிட் ரகங்கள் இவை அனைத்தும் புகுத்தப்பட்டு ஓரங்களில் கெமிக்கல் வகைகள் எல்லாம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பூச்சி தாக்குதலால் பயிர்கள் பெருமளவில் நாசமா கின்றன இதனால் இந்திய விவசாயிகள் பெருமளவில் இழப்புகளைச் சந்திக்க நேரிடுகின்றன. பயிர்களில் சக்திகள் குறைகின்றன இந்தப் பயிரினை பாதுகாக்க பல்வேறு புதுமைகளை இந்திய விவசாயிகள் செய்து வருகின்றனர். இயற்கையும் செயற்கையும் பல முயற்சிகளை மேற்கொண்டு இந்தப் பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர். பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்தி பயிர் விளைச்சலை ஊக்கப்படுத்த வேண்டும் என்று இந்திய விவசாயிகள் கணக்கிடுகின்றனர்.
பல்வேறு தேவைகளுடன் இருக்கின்றனர். இந்திய விவசாயிகளுக்குத் தற்போது ஒரு நல்ல செய்தி நாடு முழுவதும் இயற்கை விவசாயிகள் ஆங்காங்கே வீடுகள் தோறும் வீடுகள் தோறும் செய்து வரப்படுகின்றன. ஏக்கர் கணக்கில் செய்யப்பட்ட விவசாயம் தற்போது சென்ட் கணக்கில் வீடுகளில் செய்யப்படுகின்றது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
ஏக்கர் கணக்குகளில் விவசாயம் செய்தாலும் வீட்டில் விவசாயம் செய்தாலும் பொதுவாக நாம் சந்திக்கும் பிரச்சனை எனில் பயிர்களில் பூச்சித் தாக்குதல் ஏற்படுத்துதல் ஆகும். ஆமணக்கு விதைகளை 5 கிலோ எடுத்துக்கொல்ல வேண்டும் அவற்றை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். ஐந்து லிட்டர் நீருடன் ஆமணக்கு விதைகளைக் கலந்து பத்து நாட்கள் மூடி வைக்க வேண்டும்.
அந்தக் கலவையில் ஒருவித வாசனை வரும் 5 லிட்டர் பானையில் இரண்டு லிட்டர் மருந்துக் கலவை மூன்று லிட்டர் நீரை சேர்த்து வைத்து ஒரு ஏக்கர் நிலத்தில் தெளித்து வரலாம். ஏக்கர் நிலத்தில் எவ்வாறு தெளிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வோமா ஒரு ஏக்கர் நிலத்தில் 5 மண்பானைகள் வைக்க வேண்டும். அந்த மண் பானைகளின் வாய்ப்பகுதி மட்டும் தெரியுமாறு குழிதோண்டி மண்பானைகளில் அளவுக்கு ஏற்றக் குழியாக இருக்க வேண்டும்.
மண்பானைகள் அதன் வாய்ப்பகுதி மட்டும் விட்டு மற்ற பகுதியை மூட வேண்டும். இதன் மூலம் அந்த ஏக்கர் நிலத்தில் இருக்கும் பூச்சிகள் அனைத்தும் பானையை நோக்கி வரும் இரண்டு நாட்களில் கரைசலுக்கு வந்து விழும பின் இறந்துபோகும் அதன்பின்பு பூச்சிகளைத் தூக்கி வீசிவிட்டு கரைசலை பயன்படுத்தலாம். இத மாதிரி செய்து வரும்போது அதிகப்படியான சிக்கலை நாம் போக்க முடியும் பூச்சிகளைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முடியும் பல வகைகள் இருக்கின்றன. அவை பருத்தி விலை நாசப்படுத்தும் நிலக்கடலை பயிர்களைச் சேதப்படுத்துகின்றன. சிறுதானிய பயிர்கள் இந்த வண்டுகள் வகைகளால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
இந்தக் கரைசல் வைக்கும்போது அதன் நிதியானது எலிகளுக்கு வெறுப்பை உண்டாக்கும் அதன் காரணமாக அங்கு வருவது குறையும் விவசாயத்தை பாதுகாப்பு இயற்கை முறையில் பூச்சிகளை இடம்பெயரச் செய்வோம். பொன் விளையும் பூமியாக நமது மண்ணை மாற்றுவோம் வாழ்க நம் பாரதம் செழிக்கட்டும் விவசாயம்