சிகிச்சை முடிந்து இயல்பு நிலைக்குத் தயராகும் கங்கூலி
கொல்கத்தா தாதா இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்கூலி சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டார். இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர் சவுரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இரத்தகுழாயில் அடைப்பு
இரத்த குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக மூன்று இடங்களில் இவருக்கு அடைப்பு சரிசெய்ய வேண்டி இருந்தது. ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்ட பின் கொரோனா பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இல்லை என்றபின் அவருக்கு சிகிச்சை முடித்த பின்பு வீடு திரும்ப மருத்துவமனை நிர்வாகம் அனுமது அளித்தது.
மருத்துவர் குழு
கொல்கத்தா தாதா கங்குலி உடல்நிலையை கண்காணிக்க 9 பேர் கொண்ட மருத்துவ குழு சிகிச்சை வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். வீடு திரும்பும் முன்பு கங்கூலி கொடுத்த பேட்டியில் தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
மேலும் சிகிச்சை முறையாக வழங்கிய மருத்துவமனை நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்திருந்தார் அத்துடன தனது உடல்நலம் கருதி பிரார்த்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்கூலி இந்திய கிரிக்கெட் பிசிசிஐ தலைவராகவும் இருக்கின்றார்.