நீட் ரிசல்ட்க்குப் பின் சூரியா நிலைப்பாடு மாறும்
நீட் தேர்வு காரணமாகத் தமிழ்நாட்டில் மூன்று மாணவர்கள் ஒரே நாளில் உயிரிழந்தனர் வருத்தம் தெரிவித்த சூர்யா பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. நீட் ரிசல்ட் குறித்து சூர்யா கூறிய கருத்துக்குச் சட்டமன்றத்தில் உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அவருக்கு ஆதரவாக 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் செயல்பட்டனர். இந்நிலையில் நீட் ரிசல்ட் குறித்து சூர்யா பேசியதை பல அரசியல் கட்சிகள் பிரமுகர்கள் அரசியல் பேசி வரும் நிலையில் நேற்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பாஜ மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கூறியதாவது, நீட் தேர்வு குறித்து கூறிய அந்த கருத்துக்கான விடை நீட் ரிசல்ட் தரும் என்றும் அப்போது அவர் அனைத்தையும் புரிந்து கொள்வார் என்றும் கோவை மாவட்டத்தில் திரு அண்ணாமலை அவர்கள் பேசினார்.
நீட் தேர்வு பயம் மாணவர்களைத் தற்கொலை செய்ய வைத்திருக்கின்றது. இது துரதிர்ஷ்டவசமானது என்றும் தமிழகத்தில் இதுகுறித்த அச்சம் மேலோங்கி இருக்கின்றது. இதற்குச் சமூகமே முக்கிய காரணம் நீட் தேர்வு கடினம் என்ற ஒரு பிம்பத்தை மாணவர்கள் மத்தியில் புகுத்தி வந்திருக்கின்றனர். சூர்யா கொடுத்த அறிக்கையானது இலட்சுமண ரேகை தாண்டும் வகையில் இருப்பதாக அண்ணாமலை அவர்கள் பதில் கருத்து தெரிவித்திருக்கின்றார்.
நீட் தேர்வு நாடு முழுவதும் உள்ள மாணவர்களால் எழுதப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டை விட குறைந்த கல்வியறிவு குறைந்த வளர்ச்சி கொண்ட பீகார் மாநிலத்தில் எந்தவித எதிர்ப்பும் இல்லை ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அதை வைத்து அரசியல் பேசுகின்றனர். மருத்துவர் என்பவர் இரண்டாவது கடவுளுக்கு நிகரானவர் அந்தப் படிப்பிற்கு எப்போதும் தனித்துவம் இருக்கின்றது.
அப்படிப்பட்ட மருத்துவப் படிப்பினை கோடிக்கணக்கில் செலவழித்து படித்து வரும் பலருக்கு நீட் தேர்வு வைத்தது முற்றுப்புள்ளி தகுதி உடையவர் மட்டும் தேர்வு எழுதலாம் என்றார். முறையினால் பயிற்சியினால் மாணவர்கள் போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி பெரும் உத்வேகத்தை பிடிக்கும் தன்னால் கொண்டிருப்பார்கள். கல்விமுறையில் மாற்றம் கொண்டு வந்து முறையாகப் பயிற்சி கொடுத்தால், நீட் தேர்வு மட்டுமல்ல அனைத்து இந்திய நுழைவுத் தேர்வுகளையும் மாணவர்கள் வெற்றி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.