கங்குலி ஐபிஎல் தொடர்ந்து இந்திய அணி விளையாடும் போட்டி குறித்து கடிதம்
உள்ளூர் கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரை இப்போது சீசன் இல்லை. இதனை தொடர்ந்து தொடங்குவதற்கான நேரமும் இப்போது இல்லை. உள்ளூர் அனுமதி தந்த பின்பே உள்ளூர் கிரிக்கெட் குறித்து யோசிக்க முடியும்.
உள்ளூர் போட்டிகளுக்கு முன்பு வீரர்களின் பாதுகாப்பையும், உடல் நலத்தையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். உள்ளூர் போட்டிகளை தொடங்குவதற்கான சாதகமான அம்சங்களை பிசிசிஐ பரிசீலிக்கும் என்று சவுரவ் கங்குலி தெரிவித்தார்.
பிசிசிஐ நிர்வாகிகளுக்கு சௌரவ் கங்குலி எழுதியுள்ள கடிதம் குறித்து மும்பை மிரர் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் ஐபிஎல் முடித்த பின்பு இந்திய கிரிக்கெட் அணியினர் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர்.
இதன் பின்பு நாடு திரும்பும் இந்திய வீரர்கள் பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கும் இங்கிலாந்து எதிரான போட்டிகளில் பங்கேற்க இருக்கின்றனர். ஐபிஎல் தொடருக்கு பின் இந்திய அணி விளையாடும் போட்டிகள் என்னென்ன என்று கங்குலி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இப்போது, அப்போது என இழுத்துக் கொண்டிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஒருவழியாக செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.
இந்த தொடர் முடிந்ததும் இந்திய கிரிக்கெட் அணி என்னென்ன கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது என்பதை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இவ்வாறு தெரிவித்திருந்தார்.