உலகம் ஸ்தம்பிக்குமா புது வைரசால் 501.V2
உலக அளவில் பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்தல் கொரோனா வைரஸ் மீண்டும் உருமாறி இங்கிலாந்தில் பெரிய அளவில் பாதிப்பை உண்டு செய்து உள்ளது. பொதுமக்கள் பீதியில் இருக்க செய்யும் அளவிற்கு கடினமானதாக மாறியிருக்கின்றது.
உருமாரி இருக்கும் கொரோனா
உலக அளவில் இங்கிலாந்து நாட்டிலிருந்து பல நாடுகள் துண்டிக்கப்பட்டு இருக்கின்றன. இங்கிலாந்தின் லண்டனில் ஏற்பட்டுள்ள இந்த கொரொணா வைரஸ் தாக்கம் 2 ஆம் பெரிய அளவில் தாக்கியது காரணமாக உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இரவு பொது முடக்கம் அமலில் உள்ளது. கர்நாடக மாநிலத்திலும் இரவு பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட இருப்பினும் அவை மீண்டும் வாபஸ் பெறப்பட்டுள்ளன.
தென் ஆப்பிரிக்காவில் 501.V2 வைரஸ்
இந்த நிலையில் தற்போதைய சூழலில் இன்றைய நிலவரப்படி ஆப்பிரிக்க நாட்டில் புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது இந்த வைரஸ் மிகவும் வீரியமாக இருக்கின்றது. கொரோனா வைரஸில் இருந்து வேறுபட்டு காணப்படுகிறது என்று தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இந்த வைரஸின் தாக்கமானது ஒரு நாளைக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை உள்ள அனைத்து மக்களையும் பாதிக்கச் செய்கின்றது என்பது தகவல்கள் கிடைத்துள்ளன.
தென் ஆப்பிரிக்காவில் சோதனை
மக்கள் விழிப்புணர்வுடன் பாதுகாப்புடன் இருக்க அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது இங்கிலாந்து சவுத் ஆப்பிரிக்கா நைஜீரியா போன்ற நாடுகளில் தீவிரமான பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
காஞ்சிபுரத்தில் புதிய வைரஸ் தொற்றா
இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் பிரிட்டனில் இருந்து வந்த ஏழு பேருக்கு கொரோனா உறுதியாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் பிரிட்டனில் பயணித்த வந்த இந்தியர்கள் முழுமையான கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.
அரசு நடவடிக்கை
மேலும் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த பலர் கர்நாடகா தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் மேற்கு வங்கம். குஜராத். பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கு சென்றிருப்பதால் இதுகுறித்து அரசு தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.