கொரோனாவை அடுத்து இப்பொழுது நிலநடுக்கம்
கொரோனா தொற்று காரணமாக நாடே சற்று தளர்ந்து எழுந்திருக்கையில் இன்னொரு பீதி மீண்டும் இப்பொழுது ஆரம்பித்துவிட்டது. ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் ஜம்மு காஷ்மீரில் இன்று காலை 7 மணிக்கு ஏற்பட்டது. மூன்று நாட்களில் ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இது மூன்றாவது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த மூன்று நாட்களில் இன்றோடு மூன்றாவது முறை பூகம்பம் ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த பூகம்பம் கஜகிஸ்தானிலிருந்து 100 கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்திருக்கின்றது. ஸ்ரீநகர், தோட்டா மாவட்டங்கள் தொடங்கி காஷ்மீர் பள்ளத்தாக்கு வரை பெரும்பாலான பகுதிகளில் மக்கள் நில அதிர்வுகளை உணர்ந்து அச்சமடைந்துள்ளனர்.
ஜம்முவில் நிலநடுக்கம் இலேசாக இருந்திருக்கின்றது. நேற்று இரவு ஜம்மு காஷ்மீர் 3.6 நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இதனால் சேதங்கள் ஏதும் இருக்கின்றதா என்பதை ஆராய்ந்து வருகின்றனர். ரிக்டர் அளவில் 5.8 என்பது சற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பது உறுதி செய்துள்ளனர். மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர் மேலும் ஜம்மு காஷ்மீர் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றதா என ஆராய்கின்றனர்.
குஜாராத்தில் நிலநடுக்கம்:
குஜராத்திலும் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது எட்டு அளவில் ரிக்டர் அளவில் 5.6 ஆக இது பதிவாகியுள்ளது. ராஜ்கோட்டில் 118 கிலோ மீட்டர் இருந்து நிலநடுக்கம் தொடங்கியது. இதற்குமுன் குஜராத்தில் இதுவும் ஒரு சக்தி வாய்ந்ததாக கருதப்படுகின்றது. இதற்குமுன் டெல்லியில் நடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்