ஆடி செவ்வாய் வழிபாடு முறைகள்
ஆடி செவ்வாய் வழிபாடு முறைகள். ஆடி மாதத்தில் வருகின்ற செவ்வாய்க்கிழமை அன்று கணவன் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிரம்ப கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் கூட ஆடி செவ்வாயில் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கம் நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்தனர்.
செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால் மாங்கல்ய பலம் கூடும். கடைசி செவ்வாய்க் கிழமை அன்று குழந்தைகளை வீட்டுக்கு வரவழைத்து அவர்களை தெய்வமாக வழிபட்டு விருந்து அளிக்க வேண்டும்.
ஆடி செவ்வாயில் அன்னதானம் செய்தால் பிற நாட்களில் செய்வதைவிட 48 மடங்கு அதிக பலன்களைத் தரும். இந்த தானத்தில் அனைத்துவித காய்கறிகளையும் ஒன்றாக சேர்த்து சமைத்த சோறு கொடுப்பது மிகவும் நல்லது.
இந்த மாதத்தில் வருகின்ற செவ்வாய்க்கிழமைகளில் அம்மன் வழிபட்டு மங்கள கௌரி விரதம் கடைப்பிடிப்பது மிகவும் விசேஷ பலன்களைத் தரும். ஆடி மாத செவ்வாய் தனிச்சிறப்புமிக்க திருநாளாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
கடைசி செவ்வாய் அன்று வருடத்திற்கு ஒரு முறை கிராமத்தில் உள்ள வசதி படைத்த வீட்டார்கள். முறைப்படி, ஒவ்வொருவராக எல்லா குழந்தைகளையும் தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களை தெய்வமாக வழிபட்டு.
வடை, பாயசத்துடன் விருந்து அளித்து புதிய பாவாடை, சட்டைகள் வாங்கிக் கொடுப்பதுடன், தாம்பூலம் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், மஞ்சள், காசு வைத்து கொடுப்பது வழக்கமாக இருந்து வருகின்றன.
அநேக இடங்களில் நின்றுவிட்டது. சில கிராமங்களில் மட்டும் இதை தவர விடாமல் பெரியோர்கள் நடத்தி வருகின்றனர். செவ்வாய் தோஷம், அங்காரக தோஷம், செவ்வாய் நீச்சம் அடைந்தவர்கள், செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பது உத்தமம்.
அதிகாலை எழுந்து குளித்து சிவப்பு நிற ஆடை அணிந்து அம்மன் கோவிலுக்குச் சென்று நீலமலர் அல்லது செண்பக மலர்களால் அர்ச்சனை செய்வது உகந்தது. காலையில் அம்மனையும், மாலையில் முருகனையும் வழிபட்டு வர கண்கூடாக பலன் கிடைக்கும்.