சிறுக சிறுக சேர்க்க பலன் பெருகும்.!!
நாட்டு மருந்துகளில் முக்கிய இடம் பெறுவது ஓமம். இது பல மருந்து தயாரிப்பதற்கு இந்த ஓமம் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. குழந்தைகளுக்கும் சிறு வயது முதலே இந்த ஓமத்தை கொடுப்பார்கள் நம் பெரியவர்கள். வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு முதலியவைகளுக்கு ஓமத்தை வாணலியில் போட்டு நன்கு கறுப்பாகும் வரை வறுத்து பொடி செய்து, அரை ஸ்பூன் அளவு எடுத்து, மோரில் கலந்து நாள் மூன்று தடவை குடித்து வருவதால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
சொரி, சிறங்கு
சொரி, சிறங்கு, சிறிதளவு ஓமத்துடன் அதில் பாதி அளவு மஞ்சள் பொடியும், சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து, பசை போல் அரைத்துத் தடவி வருவதால் பலன் கிடைக்கும். உடல் தசைகளில் வீக்கம் இருந்தாலும், அதை தேங்காய் எண்ணெயில் சிறிதளவு போட்டு பொன்னிறமாக வறுத்தபின் வடித்தெடுத்த எண்ணையை தேய்த்து வருவது நலம் தரும்.
குளிர் கப சுரம் முதலியவை ஏற்படும் இருமல்களை நிறுத்த மிகச் சிறிதளவு ஓமத்துடன், சாதாரண உப்பு, ஒரு கிராம்பு வாயில் போட்டு மெல்லுவது நிவாரணத்தைக் கொடுக்கும். வாயிலுள்ள துர்நாற்றத்தை போக்க சிறிதளவு ஓமத்தை வாயில் போட்டு மென்று வரலாம்.
சத்தமாக பேசியதால் தொண்டையில் ஏற்படும் கரகரப்பு முதலிய தொல்லைகளுக்கு கீழ்சொன்ன கஷாயத்தை சிறிதளவு உப்பை கலக்கி சுடவைத்து தொண்டையில் ஊற்றி அண்ணாந்து சிறிது நேரம் கரகரன்னு செய்வதால் நல்ல குணம் கிடைக்கும். ஆஸ்துமா, சுவாசக் குழாயில் ஏற்படும் தொல்லைகள், மார்புச்சளி, டிபி, முதலியவைகளுக்கு
கஷாயம்
ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவு ஓமம், சம அளவு வெந்தயம் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடித்து எடுத்து வைத்துக்கொண்டு, நாள் 3 தடவை அதில் ஒரு அவுன்ஸ் எடுத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வருவதால், நல்ல மருந்தாக அமையும்.
குழந்தை பிறந்த பின் ஏற்படும் சில வயிற்றுக் கோளாறு, அஜீரணம், வாயு, போல இருக்கும் பனைவெல்ல பொடியுடன் சிறிது ஓமத்தை பொடி செய்து கலந்து சாப்பிடுவது நீண்டகாலத்து நாட்டு மருந்து ஆகும். வயிற்றுக்கடுப்பு வாந்தி முதலிய தொல்லைகளுக்கு நாள் இரண்டு முறை கீழ்சொன்ன பொடியை இளநீரில் கலந்து சாப்பிட்டு வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.
தொலைவுக்குள் பரவி இருக்கின்ற காலங்களில் ஒரு ஸ்பூன் அளவு மால்ட், வினிகர் எடுத்து அதில் சிறிதளவு பொடியை கலக்கி உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் நல்ல தடுப்பு மருந்தாக அமையும். நீடித்த அஜீரணம், நெஞ்செரிச்சல், வயிற்று வலி, அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று போக்கு, முதலிய பல தொல்லைகளுக்கு ஆகாரத்திற்குப் பின் ஒரு சிறிய அளவு மேற்சொன்ன பொடியை வாயில் போட்டு சுவைத்து சாப்பிட, நல்ல பலன்கிடைக்கும்.
வயிற்றில் வாயு உபத்திரவம், அதனால் ஏற்படும் வயிற்று வலி, நீண்ட நாளைய அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று போக்கு, வயிற்றுப் புரதம், கொழுப்பு இவை மிகுதியால் ஏற்படும் தொல்லைகளுக்கு.
செய்முறை
தேவையுள்ள அளவு ஓமத்தை எடுத்து சுத்தம் செய்து ஒரு இரவு இஞ்சி சாறில் ஊறவைத்து எடுத்து நிழலில் காயவைத்துக் கொண்டு, மறுபடியும் அதே போல் எலுமிச்ச பழ சாற்றில் ஊறவைத்து காயவைத்து எடுத்துக் கொண்டு, புதினா இலைச்சாறு பப்பாளி காய் நன்கு முற்றியதில் மேல் தோலை சீவினால் வெளிவரும் பாலை கலந்து இதிலும் முன் சொன்னபடி ஊறவைத்து காயவைத்து நன்கு பொடி செய்து காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.