வருவுக்கு வரன் வந்துருச்சா
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமிக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. சிம்புவின் போடா போடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. தற்பொழுது தமிழ் திரைப்படங்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடத்தி தமிழ் திரையுலகினரை அசத்தி வருகிறார்.
சர்க்கார் சண்டக்கோழி, ஆகிய படங்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார். கடைசியாக வரலட்சுமியின் நடிப்பில் வெளியான படம் வெல்வெட் நகரம். கடந்த சில நாட்களாகவே நடிகை வரலட்சுமி சர்ச்சையான செய்திகளில் அடிபட்டு வருகிறார். தன்னை ஒரு பிரபல நடிகரின் மகள் என்று தெரிந்தும் கூட பட வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைத்தார்கள் என்று பகீர் கருத்தை வெளியிட்டார்.
இந்த விசயம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் வரலட்சுமி சக்தி என்ற பெண்கள் பாதுகாப்பு அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். பல ஆண்டுகளாக காதலித்த நடிகர் விஷாலும் வரலட்சுமியும் திடீரென்று பிரேக்கப் என்று தெரிவித்தனர். அதற்குப் பிறகு நடிகர் விஷாலுக்கு ஒரு தொழிலதிபரின் மகளுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பின்னர் அந்த திருமணமும் தடைப்பட்டது. லாக்டோன் பிரச்சினை முடிவிற்கு வந்த பிறகு நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு விரைவில் திருமணம் நடக்கப் போவதாக தகவல்கள் அடிபட்டு வருகிறது.
வரலட்சுமிக்கு பார்க்கப்பட்ட மாப்பிள்ளை இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலி மாப்பிள்ளைக்கு நெருங்கிய நண்பர்கள் என்றும் வரலட்சுமி சரத்குமார் குடும்பத்திற்கும் மாப்பிள்ளையின் குடும்பத்திற்கும் பல ஆண்டுகளாக நட்புறவு நீடிக்கபடுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகை வரலட்சுமிக்கும் கிரிக்கெட் வீரருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இவ்விருவரின் காதலை அறிந்த இருவீட்டாரின் குடும்பத்தினரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். ஆனால் சரத்குமார் குடும்பத்தினரிடம் இருந்து எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பும் இதுவரை வரவில்லை. ஆனால் ஏற்கனவே ராதிகா சரத்குமாரின் மகளான ரேயான் கிரிக்கெட் வீரரான அபிமன்யு மிதுன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அவர்களுக்கு தற்பொழுது இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.