சமூகப் பாகுபாடுகள் நாட்டிற்கு சாபமாகும்!
இந்த சமூகம் எவ்வளவு படித்து இருந்தாலும் இன்னும் சமூக பிரிவினைகளும் ஜாதி மொழி இனம் தகராறுகளை எப்பொழுதும் கொளுத்திப் போட்டு வந்து குளிர்காய்ந்து கொண்டிருக்கின்றது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. இந்த வேறுபாடுகளை மக்கள் பாரபட்சமின்றி அனைவர் மீதும் செலுத்துகின்றனர்.
சமீபத்தில் இதில் நடிகை ரித்விகாவும் அவரது நிறத்தை வைத்து பேசி உட்படுத்தப்பட்டுள்ளார். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பதில் ஒரு நபர் நடிகை ரித்திகாவை நிறத்தை வைத்து சாதி அடையாளம் கூறி காயப்படுத்தியுள்ளார் ஒருவர். அதில் சாதி மற்றும் இனம் வேறுபாடு அவர்மீது துனிக்கப்பட்டுள்ளது. கருப்பாக இருப்பவர்கள் அனைவரும் பட்டியல் இனத்தவர்கள் என பேசியுள்ளனர்.
நிறம் என்பது பல்வேறு காரணிகளைக் கொண்டு அமைந்தது அதனை வைத்து பாகுபாடுகளைப் புகுத்துவது அறிவீனத்தை காட்டுகின்றது. எல்லா சமூகத்திலும் எல்லா பெண்களும் இருக்கின்றார்கள் இந்த சமூகத்தை சேர்ந்த பெண்கள் இப்படித்தான் இருப்பார்கள் என முத்திரை குத்தி அவர்களிடம் பாகுபாடு காட்டுவது சரியானது அல்ல இது குறித்து ரித்விகா தனது பதில் பதிவையும் கொடுக்கத் தயங்கவில்லை.
ரித்விகா சரியாகத் தெரிவித்திருந்தார். நிறத்தை வைத்து சாதியம் பேசுவது நியாயமானது அல்ல, ஒரு சினிமா நடிகைக்கே இந்த கதி என்றால் மற்ற மக்கள் நிலைமை என்னவாக இருக்கும். சமூகத்தில் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு காரணம் காட்டி புறக்கணித்தல் எவ்வாறு நியாயமாக இருக்கும்.
சமூகத்தில் இதுதான் அழுக்கு, இவர்களுக்கு எத்தனை சமூக சீர்திருத்தங்கள் கொண்டு வந்தாலும் புரிதல் கிடையாது. சமுக பாகுபாடுகள் நாட்டிற்கு அதன் முன்னேற்றத்திற்கு தடையாகும். எத்தனையோ சீர்த்திருத்தங்கள் தமிழ்நாட்டில் செய்த்டிருகின்றனர். ஆனால் இன்னும் மக்கள் மனது சீரப்படுத்தப்படவில்லை.
ரித்விகா தன் நிறத்தை வைத்து கேலி செய்ததற்கு தக்க பதில் கொடுத்தது தவறில்லை. இது புதிதாக நடப்பதிலை, ஆனால் இது போன்ற சாதியம், இன வேறுபாடுகள் பல மக்களுள் வேறுன்றி கிடக்கின்றனஎன்பது குறிப்பிடத்தக்கதாகும். படித்தவர்கள் பலர் அலுவலகங்களில் இது போன்ற கருத்துகளைத் தெரிவித்து சக அதிகாரிகள்மீது துவேசம் செய்து வருவது கார்பரேட உலகத்திலும் இருக்கின்றன. சாதிகள் இல்லையடி பாப்பா என எத்தனை பாரதிகள் வந்தாலும் இந்த மக்கிப் போன மக்கள் மனது மாறாது.