பருத்திவீரனின் முத்தழகு போட்டோ சூட்
பருத்திவீரன் முத்தழகு முத்து முத்தான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில வெளியிட்டு இருக்காங்க. ஹிந்தில வெளிவர காத்திருக்கும் மைதான் படத்தில நடிச்சிருக்காங்க பிரியாமணி. அது ஒரு கால்பந்து விளையாட்டு சரித்திர படமா சித்தரிக்கப்பட்டிருக்கு. 36 வயது இளம் நடிகை பிரியாமணி இன்ஸ்டாகிராம்ல கலக்குராங்க பாருங்க.
குழந்தைகளுக்கு போட்டுவிடும் பனியனுக்கு மேலே இருக்கிற ஜீன்ஸ் பெல்ட் சட்டைய மாடலிங்கா பெண்மணிகளுக்கு கூட போட்டா நல்லா இருக்கும்னு காண்பிச்சு இருக்காங்க பிரியாமணி. பஞ்சு மிட்டாய் கலர் பனியனும் அந்த பனியன்ல பெண்மைக்கு தகுந்தாற்போல பப்பு வச்சு முழு கை போட்டு அதுக்கு மேல ஜீன்ஸ் பில்ட் வச்ச முழு உடை பக்காவா இருக்கு. இந்த உடை வகை பேரு டங்காரீஸ். இவ்ளோ நாளா இந்த ட்ரெஸ்ஸ பேருத் தெரியாமையே வா போட்டுட்டு இருக்கோம்!
குழந்தை ஆடைலிருந்து அடுத்தது சின்ன பொண்ணு போடுற மாதிரி டிரஸ் போட்டு இருக்காங்க பிரியாமணி. ஸ்கார்ட் டாப் கோட் ஸ்டன்னிங் இருக்காங்க. ஸ்கர்ட்னா சும்மா பாவாடை இல்லைங்க வெள்ள கலர் பாவாடைல ‘வாவ் பலர் உப்ஸ்’ இப்படி பல வார்த்தைகள் பொறிக்கப்பட்டு புதுவிதமான டிசைன் பண்ணி இருக்காங்க. கோட்ட வேற வேற மாதிரி போட்டுட்டு செமையா போஸ் கொடுத்து இருக்காங்க பிரியாமணி.
மாடலா தன்னோட பயணத்தை ஆரம்பிச்சு தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என பல மொழிளைலும் நடிகையா இருக்குற பிரியாமணிக்கு எல்லா ஆடையும் கனகச்சிதமாக இருக்குங்க. பெங்களூருல வாழ்றாங்கனா சும்மாவா ஆடையிலே இருக்கிற கெத்தா ஸ்டைலா வெளிமடுத்துறாங்க பிரியாமணி.
ஃபராக் மாதிரி ஒரு ஆடையில சமீபமா போஸ் கொடுத்திருக்காங்க பிரியாமணி. க்ரீம் கலர்ல ஃபராக்கும் மேல் கோட்டும் அவங்க கொடுக்குற போஸ்ஸும் வேற லெவல். மேல் கோட் டிசைனோட ஃபராக்கோட அளவுக்கு இப்படியும் ஒரு ஆடையிருக்கா வாங்க மக்களே வாங்கிளாம்னு சூப்பரா போட்டோ ஷூட் கொடுத்திருக்காங்க பிரியாமணி.
டிரஸ் ஸ்டைலு ஹேர்ஸ்டைலு போட்டோகிராபினு எல்லோருடைய பெயரையும் மென்ஷன் செஞ்சு எல்லாருக்கும் நன்றி சொல்லிருக்காங்க பிரியாமணி.