நேற்று இன்று நாளை ஹீரோயின் திருமணம் தொழிலதிபரை மணந்தார்
நடிகை மியா ஜார்ஜ் இரண்டு நாட்களுக்கு முன்பாக பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம் நடந்தேறியது. இவருக்கு கேரள மாநிலம் கோட்டையத்தை சேர்ந்த தொழில் அதிபர் அஸ்வின் பிலிப்பையா கடந்த ஜூன் இரண்டாம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது.
பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா சூழல் என்பதால் இவர்களின் திருமணம் நேற்று முன்தினம் எளிமையாக கோட்டயத்தில் உள்ள தேவாலயத்தில் முடிந்தன. இது காதல் திருமணம் அல்ல.
பெற்றோர்களால் நிச்சயித்த திருமணம். நடிகர் விஜய் ஆண்டனி, விஷ்ணு விஷால், சசிகுமார் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஹீரோயினாக நடித்த முன்னணி நடிகை இவர். அமரகாவியம் படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா நடிகராக அறிமுகமான இப்படம் ஹீரோயினாக கடந்த 2014ஆம் ஆண்டு அறிமுகமானவர்.
இவர் பள்ளி மாணவியாக வந்து தமிழக மக்களை கொள்ளை கொண்டவர். இப்படத்தில் வரும் மௌனம் பேசும் பாடல் இன்று பலரது பிளையேர் லிஸ்ட்டில் ஃபேவரைட் பாடலாக உள்ளன. விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான நேற்று இன்று நாளை படத்தில் காதலே காதலே பாடல் பலருக்கும் காலர் டியூனாக உள்ளன.
இந்தப் பாடல்களில் மியாவின் கியூட் எக்ஸ்பிரஷன்கள் ரசிக்க வைக்கும். சசிகுமார் நடிப்பில் வெளியான வெற்றிவேல் படத்திலும் நடித்தவர். விஜய் ஆண்டனியின் எமன் படத்திலும் ஜோடியாக நடித்துள்ளார்.
தற்போது திருமணம் நடந்துமுடிந்தது ஆறு வருட காலம் தனது சினிமா பயணத்தை தொடர்ந்து திருமணத்திற்குப் பிறகு நடிப்பாரா பொறுத்துப் பார்க்கலாம்.