அழகு குறிப்புகள்சினிமாவாழ்க்கை முறைவாழ்வியல்

அழகுக்குறிப்பு தரும் குஷ்பூ

குஷ்புவால் தான் நான் என்று அமர்க்களமாக கூறும் இயக்குனர் சுந்தர் சி த்ரில்லர் குடும்பம் ஆக்ஷன் என எந்த வகை படமாக இருந்தாலும் நகைச்சுவையை புகுத்தி மக்களின் மனதை வென்றவர். இவரின் பெயரை இட்லி முதல் மல்லிகைப்பூ வரை பட்டி தொட்டி தோறும் சொல்லும்.

குஷ்பூ

சுட்டிக் குழந்தையாக 10 வயது முதலே திரையுலகில் பயணித்து வரும் குஷ்பூ எவ்வாறு இளமையான சருமத்தை மற்றும் முடியின் அழகை பாதுகாத்து வருகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடையே பரவி வந்தது. நடிகையாக மட்டுமல்லாமல் குரல் கொடுக்கும் போராளியாக இருக்கும்பொழுது தமக்கென்று நேரம் ஒதிக்கி அழகை பராமரிப்பது எப்படி!

அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் புதிதாக ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். ரசிகர்களுக்கான சிறப்பு அழகு குறிப்பாக இது அமையும். ஊரடங்கு காலகட்டத்தில் நடிகர்கள் உடல் கட்டை வலுப்படுத்துவதிலும் நடிகைகள் அழகை பராமரித்து உடல் எடையை குறைப்பதுமாக செலவழிக்கின்றனர்.

ஆனால் பொதுமக்களுக்கு பொதுவாழ்கையும் ஊரடங்கும் மத்தியில் பெரிதான வித்தியாசமில்லை. பொது வாழ்க்கை என்றால் புது புதிதாக ஹோட்டலைத் தேடி புதுப்புது உணவுகளை ருசிப்பார்கள்; ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே புதுப்புது உணவுகளை சமைத்து ருசித்தார்கள். வீட்டு சமையலாக இருந்ததால் தொப்பையும் தொந்தியும் ஏறவும் இல்லை குறையவும் இல்லை.

உணவுப்பட்டியல் முடிவடைய ஊரடங்கு முடிவடைந்ததாக இல்லை ஆகையால் புது புது முயற்சிகளை மேற்கொண்ட பொதுமக்களுக்கு அழகு குறிப்புகள் அவசியமாக இருந்தது. திரையுலகம் ரசிகர்களை ஏமாற்றவில்லை.

டிப்ஸ்

குஷ்புவின் அழகான கூந்தலின் ரகசியம் இதோ. பீட்ரூட் காயை அரைத்து தலையில் தடவியது போல் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் குஷ்பூ. அந்தப் பதிவில் தாம் எதை கொண்டு கூந்தலை பராமரிக்கிறோம் என்ற குறிப்புகளை ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார்.

பீட்ரூட் விழுது போன்று இருந்த அந்த சிகப்பு நிற கலவையின் உட்பொருட்கள் பட்டியல்- தயிர், முட்டை, ஆலிவ் ஆயில், ஹைபிஸ்கஸ் பூ மற்றும் இலை, தேன், ரோஸ்மேரி எசன்ஷியல் ஆயில் ஆகும்.

ஒவ்வொரு உட்பொருளும் தனித்தனியே பல விதமான பயன்களை கொண்டது. அனைத்தின் கலவையும் பிரமாதமான பலன் அளிக்கக் கூடியது. மக்களே குஷ்புவை போன்ற கூந்தலைப் பெற இதனைப் பயன்படுத்தி பார்த்து கருத்துக்களை தெரிவிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *