சித்ராவின் மரணம் பெண்களுக்கு ஒரு பாடம்!
சின்னத்திரை நடிகை சித்ரா அவர்களின் தற்கொலை சம்பவமானது அனைவரது இதயத்தையும் பாதித்திருக்கின்றது. அவர் நடித்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் மிகப்பிரபலமானது. தினமும் மக்கள் பார்க்கும் போது மிகப்பெரிய அளவில் முல்லை கதாபாத்திரத்தை மக்கள் இழந்து இருப்பது கண்கூடாகத் தெரிகின்றது. சித்ராவின் மரணம் பெண்களுக்குக் கற்றுத்தந்த பாடம் என்பது முக்கியமாகின்றது.
- சின்னத்திரை நடிகை, தொகுப்பாளினியான சித்ரா மரணம் மன உலைச்சலினால் ஏற்பட்டுள்ளது.
- சித்ராவின் மரணம் இன்றைய பெண்கள் அனைவருக்கும் கற்றுத்தந்துள்ள பாடமானது, தைரியமாக பெண்கள் இருப்பதுடன், புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியிருக்கின்றது.
- உடன் பழகும் ஆணோ, பெண்ணோ யாராக இருப்பினும் அவர்கள் பழகும் நோக்கம் மற்றும் கண்ணோட்டம் அறிந்து கொண்டு செயல்பட வேண்டியது அவசியமாகின்றது.
பன்முகத்திறன் கொண்ட சித்ரா
சித்ரா சின்னத்திரை நடிகை அனைவரது இல்லத்திலும் முல்லை கதாபாத்திரமாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். சீரியலில் ஒரு அமைதியான கதாபாத்திரமாக இருந்தார். ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பது விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வெளியூருக்கு செல்வது இதுபோன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் பங்கேற்றல் அயராது உழைத்து வந்தவர்.
மேலும் படிக்க : கூகுள் டூடுலில் நடனமாடும் இந்திய பெண்மணி
உழைத்து பெயர் பெற்ற சித்ரா
வாழ்வில் ஒரு உன்னத இடத்தைப் பெற உழைத்து வாழத் தொடர்ந்து சித்ரா அவர்கள் முயன்று வந்திருக்கின்றார்.ஆனால் தன்னுடன் உறவாடிக் கெடுக்கும் கணவன் போன்ற ஹேமந்த குணம் அறியாமல் இருந்திருக்கின்றார்.
இன்றய உலகில் பெண்கள் தைரியமாகக் கம்பிரமாக இருப்பது பெரிய முக்கியமல்ல அதைவிட எவ்வளவு புத்திசாலித்தனமாக இருக்கின்றோம் என்பதுதான் அவசியம் ஆகின்றது.
சாமனியப் பெண்களின் ஏமாற்ற வாழ்க்கை
முல்லையைப் போல் நிஜ வாழ்க்கையில் பல பெண்கள் சமுதாயத்தில் ஏமாற்றங்களை கடந்துதான் வாழ்ந்து வருகின்றனர். அது முல்லைக்குத் தெரியுமா என்றால் அது கேள்விக்குரியதுதான்.
முல்லை வாழ்க்கையில் விதி செய்த கோலமா, அல்லது சதியா என்று இன்னும் புரியாத புதிராக இருக்கின்றது. சித்ரா தற்கொலை செய்து கொண்டது, தமிழக மக்களின் மனதில் பெருமளவில் பாதித்திருக்கின்றது.
நெருக்கடியான சூழல் மனதைப் பாதித்தது
இன்றைய அவசர உலகில் சமூக வலைத்தளங்களில் சித்ராவின் இறப்பு மற்றும் அதற்குக் காரணமான அவரது கணவர் ஹேமந்த் அத்துடன் அவருடைய சுய காரணங்கள் என பல்வேறு சூழலும் பெருமளவில் சித்திராவைப் பாதித்திருக்கின்றது என்பதை தெளிவுபடுத்தி காட்டி இருக்கின்றது.
சித்ரா கடும் உழைப்பாளி
சித்ரா கடும் உழைப்பாளி மற்றும் சிறந்த நடிகை அனைவரிடமும் நன்றாக பழகும் பெண்ணாக இருந்திருக்கின்றார். எந்த அளவுக்கு உழைப்பாளியோ அந்த அளவிற்கு தைரியசாலி சின்னத்திரை உலகில் தான் இருந்த போதும் தனக்கு ஏற்பட்ட சவால்களை எல்லாம் தைரியத்துடன் எதிகொண்டு கையாண்டார்.
மரணம் உணர்த்திய உண்மை
சித்ரா தைரியமான பெண். ஆனால் இன்று அவர் உயிருடன் இல்லை என்று நினைக்கும்போது இது மிகவும் வருத்தம் தரக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. சித்ராவின் மரணம் ஒரு உண்மையைத் தெளிவாகக் காட்டி இருக்கின்றது. எந்த ஒரு துறையும் பாதுகாப்பானது இல்லை.
பெண்கள் தைரிசயசாலி மற்றும் புத்திசாலியாக இருக்க வேண்டும்
நாம் எவ்வளவு தைரியமாக இருந்தாலும் நம்மை அறியாமல் தவறு என்பது நடக்கும். இங்குத் தைரியசாலி என்பதைவிட புத்திசாலியாக இருக்க வேண்டும். நாம் புத்திசாலி என்பது பலருக்கு தெரியாமல் இருக்க வேண்டும். கழுவுற மீனில் நழுவி போனால்தான் சின்னத்திரை, சினிமா, போன்ற ஊடக உலகத்தில் வாழ முடியும்.சித்திரா பாடமாக நமக்குக் காட்டியிருக்கின்றார்.
மனஉலைச்சலில் மாய்த்துக் கொண்ட சித்ரா
சித்ரா கொலை செய்யப்பட்டாரா அல்லது கொன்று தற்கொலை செய்துகொள்ள தூண்ட பட்டாரா என்பது எல்லாம் அடுத்த பட்சம். அவர் இப்போது நம்மோடு இல்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகின்றது.
சித்ராவுக்கு கடன் சுமை
சித்ராவுக்கு அதிக கடன் சுமை இருந்தது, கணவராக ஹேமந்த் எந்த உதவியும் செய்யவில்லை. மேலும் அவர் கொடுத்த மன உலைச்சல் தொந்தரவு அனைத்தும் அவரது இறப்புக்கு காரணமாக அமைந்து விட்டது.
பெண்கள் உணர்ந்து தெளிவாக இருக்க வேண்டும்
பெண்கள் தெளிவாக இருக்க வேண்டும். யாரையும் முழுமையாக நம்ப கூடாது. நீங்கள் கடினமாக உழைத்தும் வாழ்க்கையில் முன்னேறும் சூழலில் உங்களுக்கு உதவுகிறேன், பேர்வழி என்று நல்லவர் வேடம் வெட்டு நயவஞ்சகம் செய்யும் பலர் இந்த உலகில் நடமாடுகின்றனர்.
சாமனிய பெண்கள் சாமார்த்தியமாக இருக்க வேண்டும்
ஒரு காவல்துறை அதிகாரியின் மகன் மகளாக இருந்து சித்ராவிற்கு இந்தக் கதி என்றால், சாமனிய பெண்கள் எவ்வளவு சாமர்த்தியமாக இருக்க வேண்டியது என்பது சித்ராவின் மரணம் அனைத்து பெண்களையும் சிந்திக்க வைத்து இருக்கின்றது.
மேலும் படிக்க : சந்தாதாரரை சளிக்க விடாத அமேசான் பிரைம் அப்டேட்ஸ்